பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா ………ஆ……
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா ……..
ஆண் : உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா
அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா
அன்று இந்திர வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா ………ஆ……
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா ……..
ஆண் : கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே
அவள் கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ
ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ
மறந்தாயோ நீயே
உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே
வருவாயோ நீயே……
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா ……..
ஆண் : தோளிலந்த சாரங்கம் எடுத்து
வரவேண்டும் நீயே
கணை தொடுத்திட வேண்டும்
அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து
வாராய் திருமாலே
உன் அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே
ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா ……..
ஆண் : ரதங்கள் படைகளென
எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாராயணனெனும் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
வேல் கொண்டு வாருங்கள்
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே………
துணை தருவாய் பெருமாளே………..