பாடகி : பி. மாதுரி
இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்
பெண் : தங்கப்பதுமை ஒன்று சதுராடுது
அதில் சந்தனப் பொற்குழம்பு இழைந்தோடுது
தங்கப்பதுமை ஒன்று சதுராடுது
அதில் சந்தனப் பொற்குழம்பு இழைந்தோடுது
பெண் : தங்கப்பதுமை ஒன்று சதுராடுது
பெண் : மோகினி என்பதிவள் பெயரல்லவா
நெஞ்சம் மோகம் திரண்டிருக்கும் சீரல்லவோ
மாலவன் பெண்மை கொண்ட மலரல்லவோ
புவி மனதை மயக்க வந்த சிலையல்லவோ
பெண் : தங்கப்பதுமை ஒன்று சதுராடுது
பெண் : கனியைப் பிளந்து வைத்த கலசங்களும்
இன்ப கள்ளில் நனைத்தெடுத்த வடிவங்களும்
இலையில் மறைத்து வைத்த மலர்ப்பந்தலும்
காணும் எவருக்கும் போதை தரும்
இதழ் வண்ணமும் கொண்டு
பெண் : தங்கப்பதுமை ஒன்று சதுராடுது
பெண் : முத்துமணித்திரள் கட்டியணைத்தொரு பூச்செண்டு
மொய்த்து சுகம்பெற ஓடிவரும் சில பொன்வண்டு
முத்துமணித்திரள் கட்டியணைத்தொரு பூச்செண்டு
மொய்த்து சுகம்பெற ஓடிவரும் சில பொன்வண்டு
தத்தை முகத்தொரு முத்து பதித்தவள் நானென்று
காமபார்வை சிலர் களவு பார்வை சிலர்
ஆவலோடு சுகம் பழகுவார்கள் சிலர்…….
பெண் : தங்கப்பதுமை ஒன்று சதுராடுது
பெண் : தை தத் தை எனத் தாவிடும் கால்களும்
மன்னர்கள் மார்பினிலே
தத்தை அதில் ஆடிடும் நாடகம் ஆயிரமே
தை தத் தை எனத் தாவிடும் கால்களும்
மன்னர்கள் மார்பினிலே
தத்தை அதில் ஆடிடும் நாடகம் ஆயிரமே
கொஞ்சும் இவள் நெஞ்சில் ஒரு மதுரசம்
அஞ்சும் இவள் கண்ணில் ஒரு புதுரசம்
இரவிலே சுகமெல்லாம் பெருகிட
உறவினைத் தேடுவோர் வருகவே
பெண் : தங்கப்பதுமை ஒன்று சதுராடுது
பெண் : காலம் பிறந்ததென்று களி கொள்ளுங்கள்
உங்கள் கவலை முடிந்ததென்று மொழி சொல்லுங்கள்
காலம் பிறந்ததென்று களி கொள்ளுங்கள்
உங்கள் கவலை முடிந்ததென்று மொழி சொல்லுங்கள்
தேவர் உலகில் திருநாள் காணுங்கள்
இந்த தேவி துணையில் பலநாள் வாழுங்கள்
பெண் : தங்கப்பதுமை ஒன்று சதுராடுது
அதில் சந்தனப் பொற்குழம்பு இழைந்தோடுது
தங்கப்பதுமை ஒன்று சதுராடுது