Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Thendral Varum lyrics from Friends movie - ப்ரெண்ட்ஸ் திரைப்படத்திலிருந்து தென்றல் வரும் வழியை பாடல் வரிகள்

தென்றல் வரும் வழியை பாடல் 2001-ல் வெளியான ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: இளையராஜா · பாடியவர்: பவதாரிணி

Thendral Varum is a song from the 2001 Tamil film Friends, written by Palani Barathi, composed by Ilaiyaraaja and sung by Bhavatharani.

WhatsApp
Movie Name (in Tamil)
ப்ரெண்ட்ஸ்
Year
2001
Singers
Bhavatharani

Lyrics(Tamil)

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ

தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா

நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்
காதல் என்னும் ஆற்றில் இங்கு முதல் முதல் குதித்தது யார்

என்னில் உனை கண்டேன் நமை இரண்டென பிரிப்பது யார்
தேகம் அதில் தீபம் ஒன்று பிரிந்திட இருப்பது யார்

துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம்
ஏங்கும் நெஞ்சின் ஏக்கம் என்றும் தொடர வேண்டும்

குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ

தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா

காதல் உன் காதல் அது மழையென வருகிறதே
நெஞ்சம் என் நெஞ்சம் அதில் சுடச்சுட நனைகிறதே

நாணம் என் நாணம் ஒரு வானவில் வரைகிறதே
மௌனம் என் மௌனம் ஒரு வார்த்தைக்கு அலைகிறதே

பார்த்தேன் காதல் பயிரின் விதைகள் உந்தன் கண்ணில்
வளர்த்தேன் முத்தம் பூக்கும் செடியை எந்தன் நெஞ்சில்

குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா

அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ

தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா

Thendral Varum song FAQ

Who sang Thendral Varum?

Thendral Varum was sung by Bhavatharani for the 2001 Tamil film Friends.

Who wrote the lyrics of Thendral Varum?

The lyrics of Thendral Varum were written by Palani Barathi.

Who composed the music for Thendral Varum?

The music for Thendral Varum was composed by Ilaiyaraaja.

Which movie is the song Thendral Varum from?

Thendral Varum is from the Tamil film Friends, released in 2001. The film has 8 songs on Tamilputhumai.

தென்றல் வரும் வழியை பாடலை பாடியவர் யார்?

தென்றல் வரும் வழியை பாடலை பாடியவர் பவதாரிணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ப்ரெண்ட்ஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்