Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Thathi Thathi Thavum lyrics from Thalaimurai movie - தலைமுறை திரைப்படத்திலிருந்து தத்தித் தத்தித் தாவும் பாடல் வரிகள்

தத்தித் தத்தித் தாவும் பாடல் 1998-ல் வெளியான தலைமுறை திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: சுஜாதா மோகன்

Thathi Thathi Thavum is a song from the 1998 Tamil film Thalaimurai, composed by Ilaiyaraaja and sung by Sujatha Mohan.

WhatsApp
Movie Name (in Tamil)
தலைமுறை
Year
1998

Lyrics(Tamil)

தத்தித் தத்தித் தாவும் பூவே
திக்கித் திக்கிப் பேசும் கிளியே
தோளில் ஆட வா
சுற்றிச் சுற்றிப் பாடும் காற்றே
தித்தித்திடும் தேனின் ஊற்றே
மடியில் ஆட வா

மழலையின் மடியிலே மழலை ஆனேன்
ஒளி விடும் சிரிப்பிலே
உருகி இந்த உலகை மறந்தேன்
பச்சக் கிளி பேசும் பேச்சு
அன்னைக்கது ராகம் ஆச்சு….(தத்தித்)

ராகங்களின் தாய் யாரு
பொங்கி வரும் தாலாட்டு
காற்றுக்கொரு தாயும் யாரு கண்ணே நீ கூறு
தினக்கு திம் தினக்கு திம் திரனன

மழலை என்னும் தேனாற்றில்
என்னைக் கொஞ்சம் நீராட்டு
பிஞ்சுக் குரல் வீணை கொஞ்சி ராகம் நீ பாடு
தினக்கு திம் தினக்கு திம்

பிள்ளை இல்லா வீடு...
பிள்ளை இல்லா வீடு வீடு அல்ல காடு
பெற்ற பெரும் பேரு பிள்ளைகளின் கூட்டு
சாமி ஓடும் தெய்வங்கள் ஓடும்
கோவில் இதுதானே.....தனக்கு தனனம்..(தத்தித்)

துள்ளி வரும் பூக் கூட்டம்
வண்ண வண்ண தேரோட்டம்
தொட்டில் ஒன்று ஆடும் வீடு பூந்தோட்டமே
தினக்கு திம் தினக்கு திம் திரனன

குட்டிக் குட்டி விண் மீன்கள்
கொஞ்சிச் சிந்தும் தேன் பூக்கள்
அங்கும் இங்கும் ஆட்டம் போடும் மான் கூட்டமே
தினக்கு திம் தினக்கு திம்

அன்னை என்னும் வார்த்தை...
அன்னை என்னும் வார்த்தை
பெண்மைக்கொரு யோகம்
பிள்ளை என்னும் வார்த்தை
அன்னைக்கொரு யோகம்
பிள்ளைகள் எனக்கு இல்லை என்றாலும்
நான் ஒரு தாய்தானே...தனக்கு தனனம்..(தத்தித்)

Thathi Thathi Thavum song FAQ

Who sang Thathi Thathi Thavum?

Thathi Thathi Thavum was sung by Sujatha Mohan for the 1998 Tamil film Thalaimurai.

Who composed the music for Thathi Thathi Thavum?

The music for Thathi Thathi Thavum was composed by Ilaiyaraaja.

Which movie is the song Thathi Thathi Thavum from?

Thathi Thathi Thavum is from the Tamil film Thalaimurai, released in 1998. The film has 6 songs on Tamilputhumai.

தத்தித் தத்தித் தாவும் பாடலை பாடியவர் யார்?

தத்தித் தத்தித் தாவும் பாடலை பாடியவர் சுஜாதா மோகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தலைமுறை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்