பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஆர். டி. பர்மன்
ஆண் : அட கோவிந்தய்யா பேரைச் சொன்னா
கோழி குட்டியிடும்
கொண்டைச் சேவல் இவரை கண்டா
குனிஞ்சு முட்டையிடும்
சென்னையில சைதாப்பேட்டை
சேலத்துல செவ்வாப்பேட்டை
மதுரையில ஐய்யன்பேட்டை
அத்தனையும் ஐயா கோட்டை
அங்கங்கே ஐயாவுக்கு ஆளிருக்காக
கோவிந்தய்யா குரல் கொடுத்தா
குறுக்கு பேட்டை வரும்
இவரு விசில் அடிச்சா சென்டரல் ரயிலு
எக்மோரு ஓடிவரும் ஏ……ஏ…..ஏஹே…..
ஆண் : தண்ணி வண்டி தண்ணி வண்டி
தண்ணி வண்டி தண்ணி வண்டி தெருவில் வந்தேன்டா
நான் பேட்டைக்குள்ள எல்லாருக்கும் மருமகன் தான்டா
நெப்போலியன் எப்போதுமே கையிலுருப்பான்டா டா டா
ஐயா யாரு
குழு : குவாட்டர் கோவிந்தன் சாரு
ஆண் : அடடடா ஐயா யாரு
குழு : குவாட்டர் கோவிந்தன் சாரு
ஆண் : ஹே தண்ணி வண்டி தண்ணி வண்டி தெருவில் வந்தேன்டா
நான் பேட்டைக்குள்ள் எல்லாருக்கும் மருமகன்தான்டா
நெப்போலியன் எப்போதுமே கையிலுருப்பான்டா
ஐயா யாரு
குழு : குவாட்டர் கோவிந்தன் சாரு
ஆண் : ஹா ஐயா யாரு
குழு : குவாட்டர் கோவிந்தன் சாரு
ஆண் : ஹோய் மாடிக்கு வேற சட்டம் சேரிக்கு வேற சட்டம்
இனிமே நடக்காது ஏட்ட திருத்திப்புட்டோம்
குழு : மாடிக்கு வேற சட்டம்
ஆண் : ஹ
குழு : சேரிக்கு வேற சட்டம்
ஆண் : ஹோ
குழு : இனிமே நடக்காது
ஆண் : ஹ
குழு : ஏட்ட திருத்திப்புட்டோம்
ஆண் : எவன்டா புத்தன் இங்கே
எவன்டா சுப்பன் இங்கே
வெளக்கே அணைச்சுபுட்டா
எவன்டா ராமன் இங்கே
குழு : வெளக்கே அணைச்சுபுட்டா
எவன்டா ராமன் இங்கே
ஆண் : பெரிய மனுசன் திருடிப்புட்டா ஓஓஓஒ
பெரிய மனுசன் திருடிப்புட்டா கை தட்டுறாங்க
சின்ன பசங்க திருடிப்புட்டா கைய வெட்டுறாங்க
ஆராய்ஞ்சு சொன்னேன் பாரு அண்ணன் பேரு கேட்டு பாரு
ஐயா யாரு
குழு : குவாட்டர் கோவிந்தன் சாரு
ஆண் : ஐயா யாரு
குழு : குவாட்டர் கோவிந்தன் சாரு
குழு : …………………….
ஆண் : …………………..
ஆண் : ஓய் படிப்பு படிக்கவில்ல அதனால் குறையுமில்ல
பணமும் சேர்க்கவில்லை அதனால் வரியுமில்ல
குழு : படிப்பு படிக்கவில்ல
ஆண் : ஹ
குழு : அதனால் குறையுமில்ல
ஆண் : ஹ
குழு : பணமும் சேர்க்கவில்லை
ஆண் : ஹ
குழு : அதனால் வரியுமில்ல
ஆண் : மடியில கணமும் இல்ல
அதனால பயமும் இல்ல
படுத்தா உறக்கம் வரும்
மாத்திரை தேவையில்ல
குழு : படுத்தா உறக்கம் வரும்
மாத்திரை தேவையில்ல
ஆண் : கடவுளுக்கும் இருக்குதடா……ஆ…..ஆ…..
கடவுளுக்கும் இருக்குதடா ஆயிரம் தொல்லை
என்னைப்போல சுதந்திரமா கடவுளூம் இல்ல
அண்ணனுக்கு ஆயுள் நூறு சந்தேகமின்னா கைய பாரு
ஐயா யாரு
குழு : குவாட்டர் கோவிந்தன் சாரு
ஆண் : ஹோய் ஹோய் ஐயா யாரு
குழு : குவாட்டர் கோவிந்தன் சாரு
ஆண் : தண்ணி வண்டி தண்ணி வண்டி
தண்ணி வண்டி தண்ணி வண்டி தெருவில் வந்தேன்டா
நான் பேட்டைக்குள்ள எல்லாருக்கும் மருமகன் தான்டா
நெப்போலியன் எப்போதுமே கையிலுருப்பான்டா டா டா
{ஐயா யாரு
குழு : குவாட்டர் கோவிந்தன் சாரு
ஆண் : அடடடா ஐயா யாரு
குழு : குவாட்டர் கோவிந்தன் சாரு} (3)