பாடகர்கள் : எல் ஆர். ஈஸ்வரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
குழு : தலை என்ன சாயுது
பெண் : எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
குழு : எங்கெங்கே போகுது
பெண் : என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
குழு : தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
ஆண் : ஹா….ஆஅ….ஆஆ…..
ஹோ…..ஓ…..ஓ…..ஹோ…..ஓ….ஹோய்
ஆண் : தேனோடும் பூ முகத்துச்
செவ்வாயில் பால் வழியத் தெளித்த காதல்
வண்டாடும் கள்ளவிழி மண் பார்க்க
முகம் பார்க்க மலர்ந்த காதல்
கைதட்டல்கள் : ………………………..
ஆண் : பள்ளியிலும் கொள்ளாமல்
பாலும் சுவைக்காமல்
வெள்ளை மனம் தாளாமல்
விழியிரண்டும் மூடாமல்
பட்ட துயர் மேத்தமென்று
பருவமுகம் காட்டுதம்மா
கட்டழகு ஏங்குதம்மா
வட்ட முகம் வாடுதம்மா…..
ஹா….ஆஅ…..ஹோ….ஓ…..ஹோ….ஓ..ஹோய்
பெண் : திங்கள் மேனி மின்ன
உன் தங்கக் கால்கள் பின்ன
குழு : திங்கள் மேனி மின்ன
உன் தங்கக் கால்கள் பின்ன
ஆண் : தேரேறி வந்த மன்னன்
சொன்ன சேதி என்ன
பெண் : தேரேறி வந்த மன்னன்
சொன்ன சேதி என்ன
இருவர் : பொன்னாலே மேடை போட்டுக்
கோலம் போடச் சொல்லவா
குழு : பொன்னாலே மேடை போட்டுக்
கோலம் போடச் சொல்லவா
பெண் : பூவாலே மஞ்சம் வைத்துப்
பாடம் சொல்லச் சொல்லவா
குழு : பூவாலே மஞ்சம் வைத்துப்
பாடம் சொல்லச் சொல்லவா
குழு : தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
ஆண் : ஹா…..ஆஅ….ஆஅ….
ஹோ….ஓ…..ஓ…..ஹோ…..
ஓ….ஹோ…..ஓ….ஓஒ……..
ஆண் : சிற்றாடை மேல் ஒதுக்கிச்
செம்பஞ்சுக் காலெடுத்துச்
சிரிப்புக் காட்டி….ஈ……
குற்றாலத் தருவியெனக்
குளிர்ந்த முக வெண்ணிலவில்
திலகம் தீட்டி…..ஈ…..
ஆண் : சங்குக் கழுத்தினிலே
தங்க நகை குலுங்க
மங்கை நடந்து வர
மானெல்லாம் தொடர்ந்து வர
கொட்டுங்கள் மேளமெனக்
குரலொன்று கேட்டதம்மா
கொஞ்சு மயில் பிஞ்சு மனம்
குளிராய்க் குளிர்ந்ததம்மா
ஆண் : ஹா….ஆஅ….ஆஆ…..
ஹோ…..ஓ…..ஓ…..ஹோ…..ஓ….ஹோய்
பெண் : மன்னன் வந்தான் மெல்ல
பூமாலை சூட்டிக் கொள்ள
குழு : மன்னன் வந்தான் மெல்ல
பூமாலை சூட்டிக் கொள்ள
ஆண் : பால் வண்ணப் பெண்ணைக் கண்டு
காதல் தேனை அள்ள
குழு : பால் வண்ணப் பெண்ணைக் கண்டு
காதல் தேனை அள்ள
இருவர் : உல்லாசப் பாடம் சொன்னான்
உள்ளம் துள்ளத் துள்ள
குழு : உல்லாசப் பாடம் சொன்னான்
உள்ளம் துள்ளத் துள்ள
பெண் : பொல்லாத இரவும் கூடச் செல்லும்
மெல்ல மெல்ல
குழு : பொல்லாத இரவும் கூடச் செல்லும்
மெல்ல மெல்ல
அனைவரும் : தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
ஆண் : ஹா…..ஆஅ….ஆஅ….
ஹோ….ஓ…..ஓ…..ஹோ…..
ஓ….ஹோ…..ஓ….ஓஒ……..