பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : கண்மணி கண்மணி கனியே
சிறுமணி
பொன்மணி பொன்மணி பூவே
மாங்கனி
முத்தமிழ் முக்கனி முப்பாலே
இந்த மூவுலகம் உனக்கப்பாலே
பெண் : கண்மணி கண்மணி கனியே
சிறுமணி
பொன்மணி பொன்மணி பூவே
மாங்கனி
முத்தமிழ் முக்கனி முப்பாலே
இந்த மூவுலகம் உனக்கப்பாலே
பெண் : தேன் தரும் மலரே
திருநாள் சிலையே
வான் தரும் மழையே
வளரும் பிறையே
பெண் : காவியக் கலையே
காவிரிக் கரையே
காவியக் கலையே
காவிரிக் கரையே
பெண் : தீபத்தின் ஒளியே தெய்வத்தின் நிழலே
உடலும் உயிரும் நீயே அம்மா
நான் உனக்கே உலகில் வாழ்வேன் அம்மா
பெண் : முத்தமிழ் முக்கனி முப்பாலே
இந்த மூவுலகம் உனக்கப்பாலே
பெண் : கண்மணி கண்மணி கனியே
சிறுமணி
பொன்மணி பொன்மணி பூவே
மாங்கனி
முத்தமிழ் முக்கனி முப்பாலே
இந்த மூவுலகம் உனக்கப்பாலே
பெண் : கோவில் வாசல் கோபுர கலசம்
கொஞ்சும் தென்றல் மங்கள கீதம்
தங்கத்தில் வைரம் சங்கொலி நாதம்
தங்கத்தில் வைரம் சங்கொலி நாதம்
உன் புகழ் பாடும் இன்னிசை கேட்டேன்
என்னை உனக்கே தந்தேன் அம்மா
நான் என்றும் உனக்கே வாழ்வேன் அம்மா
பெண் : கண்மணி கண்மணி கனியே
சிறுமணி
பொன்மணி பொன்மணி பூவே
மாங்கனி
முத்தமிழ் முக்கனி முப்பாலே
இந்த மூவுலகம் உனக்கப்பாலே