தமிழன் வீர தமிழன், தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில், தோழன் தோள் கொடுப்பன்
அனலை போல இருப்பன், அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால், நெற்றிக்கண் திறப்பான்

இவனை தீண்ட நினைத்தால் இரும்புக்கையால் அழிப்பான்
இருளை போக்க இவனே விளக்கை போல வருவான்
தர்மம் காக்க என்றும் தன்னை தானே தருவான்
அதர்மம் அழிக்க இவனே ஆயுதமாகிடுவான்
தமிழன் வீர தமிழன், தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில், தோழன் தோள் கொடுப்பன்
எரிமலை போல எழுவான் எதிரியும் இவனை தொழுவான்
புயலை போல வந்து போர்க்களம் வென்றிடுவான்
தனியே என்றும் ஜெயிப்பான் தரணியில் என்றும் நிலைப்பான்
இவனை போல ஒருவன் இனிமேல் யார் வருவான்