Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Sri Ranganathanin lyrics from Mahanadhi movie - மகா நதி திரைப்படத்திலிருந்து ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாடல் வரிகள்

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாடல் 1994-ல் வெளியான மகா நதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Sri Ranganathanin is a song from the 1994 Tamil film Mahanadhi, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
மகா நதி
Year
1994
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண்குழு : கங்கா சங்காச காவேரி ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசானி நமஸ்தேஸ்து சுகாசரி

பெண் : ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

***

பெண் : கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

***

ஆண் : கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கள நீராட முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

இருவர் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

Sri Ranganathanin song FAQ

Who sang Sri Ranganathanin?

Sri Ranganathanin was sung by S. P. Balasubramaniam for the 1994 Tamil film Mahanadhi.

Who wrote the lyrics of Sri Ranganathanin?

The lyrics of Sri Ranganathanin were written by Vaali.

Who composed the music for Sri Ranganathanin?

The music for Sri Ranganathanin was composed by Ilaiyaraaja.

Which movie is the song Sri Ranganathanin from?

Sri Ranganathanin is from the Tamil film Mahanadhi, released in 1994. The film has 9 songs on Tamilputhumai.

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாடலை பாடியவர் யார்?

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மகா நதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்