Tamil Songs lyrics · 2008
Solladi Enthan lyrics from Kadhalil Vizhunthen movie - காதலில் விழுந்தேன் திரைப்படத்திலிருந்து சொல்லடி எந்தன் பாடல் வரிகள்
சொல்லடி எந்தன் பாடல் 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: திப்பு
Solladi Enthan is a song from the 2008 Tamil film Kadhalil Vizhunthen, written by Thamarai, composed by Vijay Antony and sung by Tippu.
- Movie Name
- Kadhalil Vizhunthen 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காதலில் விழுந்தேன்
- Music
- Vijay Antony
- Year
- 2008
- Lyrics
- Thamarai
- Singers
- Tippu
Lyrics(Tamil)
நில்லடி நீ செய்வது சரியா... சரியா...
உன் தோட்டத்துப் பூவா... என் இதயம்.. என் இதயம்..
நீ போகின்ற போக்கில்... பறித்தாயே..
குழு: பறித்தாயே..
ஆண்: உன் கிணற்றில் உள்ள நீரா... என் இதயம்.. என் இதயம்..
நீ நினைத்து நினைத்து வாறி இறைத்தாயே...
குழு: இறைத்தாயே... ஓஹோ.... (சொல்லடி எந்தன்...)
(இசை...)
ஆண்: உன் கட்டில் மெத்தையே என் இதயமா சொல்...
சுகமாக படுத்து நீயும் உருண்டாயே...
உந்தன் புத்தகத்தின் முதல் பக்கம் என் இதயமா சொல்...
உன் பெயரை எழுதிவிட்டு போனாயே...
உன் கூந்தல் காட்டில் ஒளியும் ஒரு குழலா எந்தன் இதயம்
ஒரே முடிச்சில் என்னை அள்ளி புதைத்தாயே புதைத்தாயே
உன் வீட்டின் முற்றத்தின் மேல் விழும் மழையா எந்தன் இதயம்
ரசித்த பின்னால் ஜன்னல் சாற்றிப் படுத்தாயே.... (சொல்லடி எந்தன்...)
(இசை...)
ஆண்: உன் நெற்றியின் வேர்வைத் துளியாய் போராடும் எந்தன் இதயம்
ஒற்றை விரலில் என்னை சுண்டி எரித்தாயே அடியே
உன் கை கடிகாரத்தில் ஓடுகின்ற முள்ளாய் என் இதயம்
ஒரே பார்வை வீசி பின்னர் மறந்தாயே
நீ போடும் வாசல் கோலம் அது தானா எந்தன் இதயம்
ஒரு சில கோடுகளால் என்னை வளைத்தாயே
உன் காலை தாங்கும் செருப்பா போராடும் எந்தன் இதயம்
ஊரெங்கும் சுற்றி வாசலில் கழற்றி வைத்தாயே... (சொல்லடி எந்தன்...)
Solladi Enthan song FAQ
Who sang Solladi Enthan?
Solladi Enthan was sung by Tippu for the 2008 Tamil film Kadhalil Vizhunthen.
Who wrote the lyrics of Solladi Enthan?
The lyrics of Solladi Enthan were written by Thamarai.
Who composed the music for Solladi Enthan?
The music for Solladi Enthan was composed by Vijay Antony.
Which movie is the song Solladi Enthan from?
Solladi Enthan is from the Tamil film Kadhalil Vizhunthen, released in 2008. The film has 8 songs on Tamilputhumai.
சொல்லடி எந்தன் பாடலை பாடியவர் யார்?
சொல்லடி எந்தன் பாடலை பாடியவர் திப்பு.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.