சாரலே சாரலே சாயவா தோளிலே
தோளிலே தாவவா காதலே
நேரிலே நேரிலே பேசவா ஆவலே
ஆவலே ஆடவா ராவிலே
மாலை நேர மேகமே காலை நேர தாகமே
யாவுமே தேவதை தேசமே
ஏய் பூவா பூவா தலையா நீ போறப் பாதை சரியா
குவா குவா கிளியா நீ கூடுப்பாயவறியா
ஹேய் நிலா நிலா சிலையா நீ நேசமான மழையா
பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா (சாரலே)
தாவணிப் கெஞ்சுது நாடகமாடுது ஏனோ ஏனோ ஏனோ
கொடியின் நிழலே ஓவியமானது ஏனோ ஏனோ ஏனோ
வேறு வேறு தேவையைப் பேசிடாத நாழிகை
தேவைத் தீர வாழவே தேவலோக மாளிகை
விடிய விடிய உறவே மனது உருகினேனே
தீரா ருசியை திருடிப் பருகுவேனே
ஹேய் நிலா நிலா சிலையா நீ நேசமான மழையா
பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா (சாரலே)
தாமரை நீரினில் தாரகை ஆனது தேனே தேனே தேனே
சூரிய தேவனே சூரையும் ஆடுது தானே தானே தானே
ஏடு போல நாளுமே எழுது மாயை செய்தியை
ஜாடையாலே ஊனிலே தடவினாயே ஆசையை
இனிய இனிய சுமையை இரவு அறிய வருமே
பாயை நேய உதடு கவிதை தருமே
ஏய் பூவா பூவா தலையா நீ போறப் பாதை சரியா
குவா குவா கிளியா நீ கூடுப்பாயவறியா..(ஹேய் நிலா)