மஞ்சப் பட்டு பளபளக்க
நெத்திப் பொட்டு மினு மினுக்க
மதுர மல்லி மண மணக்க ஆத்தா வராடா
மாரி ஆத்தா வராடா...........(மஞ்சப்)
உலகைக் காக்க தானடா ஓடி வந்த தாயடா
நெனச்சதெல்லாம் நடத்தி வைக்கும்
நம்ம தாயி மாரிடா... மாரி ஆத்தா வராடா....
மஞ்சப் பட்டு பளபளக்க........
காது குத்த வந்தவங்க
கழுத்துச் செயினை பாத்துக்குங்க
தீபம் ஏத்த வந்தவங்க
திருட்டுப் பயலப் பாத்துக்குங்க
நேந்துக்கிட்டு வந்தவங்க...ஏ மாமோயீ....
நேந்துக்கிட்டு வந்தவங்க
நெத்தி சுட்டியப் பாத்துக்குங்க
சொல்லிப்புட்டம் பாத்துக்குங்க
சொந்தமெல்லாம் கேட்டுக்குங்க..அப்பு அப்பு
வந்தனமய்யா வந்தனம்
வந்த சனங்களெல்லாம் குந்தணும்
குசும்புக்காரக் கொழுந்தனெல்லாம்
கூடி நிக்காமப் பாத்துக்கங்க
நேர்த்திக் கடன் போட்டுக்கிட்டு
நித்தம் ஒன்ன நெனச்சுக்கிட்டு
நோம்பிருந்து வந்தோமம்மா
எங்க நோய் நொடியத் தீரும் அம்மா
ஏய்.... சிங்கரத சப்பரத்தில்
சிரித்து வரும் உன் முகத்தப்
பாத்தாலே போதும் அம்மா
பட்டக் கஷ்டம் எல்லாம் விலகும் அம்மா
தீமைகளை எரித்திடவே
தீச்சட்டிய எடுக்குறோம்
மனக் கொறையத் தீத்து வைக்க
மாவிளக்க எடுக்குறோம்
வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி
வேண்டும் வரம் வேண்டும் வரம்
தருவாய் அம்மா.... அம்மா.... (மஞ்சப்)
உன்ன விட சக்தி இல்ல
சக்திக்கொரு எல்லை இல்ல
பக்தியோடு வந்தோம் அம்மா
தீய சக்திகள அழிப்பாய் அம்மா
மும்மாரிப் பொழிந்திடவே
மும்மதமும் இணைந்திடவே
கண் திறந்து பாரும் அம்மா
காவேரி நீர் திறக்க வாரும் அம்மா
காடு வளம் செழித்திடவே
கரகம் ஆடி வந்தோம்
ஒலக சனம் கூடி வாழ
அலகு குத்தி வந்தோம்
வேப்பிலைக்காரி வேப்பிலைக்காரி
வேண்டும் வரம் வேண்டும் வரம்
தருவாய் அம்மா.... தாயே......(மஞ்சப்)