பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
பெண் : சம்மதம் சொல்ல வந்தாள்
சிறு தாமரைப் பூவினை தந்தாள்
சம்மதம் சொல்ல வந்தாள்
சிறு தாமரைப் பூவினை தந்தாள்
தந்த நேரம் நல்ல நேரம்
இளம் பாவை உந்தன் ஓரம்
ஆண் : சம்மதம் சொல்ல வந்தாள்
சிறு தாமரைப் பூவினை தந்தாள்
தந்த நேரம் நல்ல நேரம்
இளம் பாவை எந்தன் ஓரம்
ஆண் : காவேரி ஓரம் பொன்மாலை நேரம்
கண்ணே உன் கை சேர நான் தேடினேன்
பெண் : கண்ணா உன் தோளில் பூமாலையாக
எப்போதும் நான் ஆடத்தான் வேண்டினேன்
ஆண் : மரகத வீணை மேனியில்
அதிசய ராகம் மீட்டினேன்
தினசரி உன்னை நாடினேன்
பெண் : சம்மதம் சொல்ல வந்தாள்
சிறு தாமரைப் பூவினை தந்தாள்
பெண் : குற்றாலச்சாரல் சிற்றாடை மீதில்
பட்டாடும் போதென்ன ஆனந்தமோ
ஆண் : சிற்றோடை ஒன்று வற்றாமல் இன்று
ஊற்றாகப் பாய்கின்ற ஆரம்பமோ
பெண் : இனம் அறியாத வேதனை
தொடர்கதை ஆகிப்போனதே
சுகமெனும் கீதம் பாடுதே..
ஆண் : இன்றைக்கு காதல் நன்நாள்
கண்ணன் உன்னுடன் சேரும் பொன்நாள்
புது நாணம் அலை மோதும்
இது போதும் போதும் போதும்
பெண் : சம்மதம் சொல்ல வந்தாள்
சிறு தாமரைப் பூவினை தந்தாள்
தந்த நேரம் நல்ல நேரம்
இளம் பாவை உந்தன் ஓரம்….