பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
பெண் : குக்குக்கூ……..
குக்குக்கூ என கூவும் குயிலோசை
தித்திக்கும் என் கண்ணன் குழலோசை
நாளும் நாளும் கேட்டு என் தேகம் வாடினேன்
காதல் ராதை நானும் குயிலாக பாடினேன்
கூடும் காலம் சேரும் நேரம்
எங்கே என்று நினைந்து நினைந்து
ஆண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை
நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ
காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ
கூடும் காலம் சேரும் நேரம்
எங்கே என்று நினைந்து நினைந்து
பெண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை…..
பெண் : உன்னோடு நான் சேர உறக்கமில்லை
கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை
உன்னோடு நான் சேர உறக்கமில்லை
கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை
ஆண் : பள்ளியறைக்கு பூஜை நான் போடவா
அள்ளி அணைக்க அன்பே என் கூடவா
பெண் : உள்ளவரைக்கும் அள்ளி வழங்கு
வெள்ளம் அணை தாண்டாது விட்டுவிட கூடாது
பெண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை…..
ஆண் : ஆ ஆ ஆ…..
பெண் : ஆ ஆ ஆ…..
ஆண் : ஆ ஆ ஆஹா ஆஹா…..
பெண் : ஆ ஆ ஆ ஆ……
ஆண் : நிலவுக்கு நீ என்ன இளையவளோ
என் நிலவரம் தெரியாத புதியவளோ
நிலவுக்கு நீ என்ன இளையவளோ
என் நிலவரம் தெரியாத புதியவளோ
பெண் : தலைவனை நான் நெஞ்சில் தாலாட்டுவேன்
தனியிடத்தில் உன்னை பாராட்டுவேன்
ஆண் : கொட்டும் அருவி…….தொட்டு தழுவி..
பட்ட இடத்தில் இன்று…….கட்டி அணைத்தே பாடும்
ஆண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை
பெண் : தித்திக்கும் என் கண்ணன் குழலோசை
ஆண் : நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ
காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ
பெண் : கூடும் காலம் சேரும் நேரம்
எங்கே என்று நினைந்து நினைந்து
குக்குக்கூ என கூவும் குயிலோசை
ஆண் : தித்திக்கும் உன் கண்ணன் குழலோசை