பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஅ
ஆஆஆ ஆஆஆ
ஆண் : ரெட்டைக் கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்
பெண் : இறக்கை விரித்து ஒன்றாக
நீந்தும் எட்டுத் திசைகள்
ஆண் : தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்
பன்னீர் துளியும் வெந்நீராகும்
பெண் : இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
ஆண் : ரெட்டைக்கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்
ஆண் : ஈர பூக்களில் தேன் இதழ்களில் விழ
நான் எடுத்தேன்…நான் எடுத்தேன்
பெண் : ஓர பார்வையில் உன் உணர்ச்சிகள் வர
நான் படித்தேன்…நான் படித்தேன்
ஆண் : இதயத்தை திறந்தாய் நீ..
இடையினில் விழுந்தேன் நான்..
பெண் : எனக்கென பிறந்தாய் நீ…
இருப்பதை கொடுத்தேன் நான்..
ஆண் : நெஞ்சை தழுவி என் தோளில்
சாயும் வெள்ளி அருவி..
பெண் : கண்ணில் எழுதி உன் பேரை
பாடும் வண்ண குருவி…
ஆண் : சங்கீதம்தான்…சந்தோஷம்தான் நம்
உறவினில் பல சுரங்களும் லயங்களும் எழ
ஆண் : ரெட்டைக் கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்
பெண் : இறக்கை விரித்து ஒன்றாக
நீந்தும் எட்டுத் திசைகள்
ஆண் : தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்
பன்னீர் துளியும் வெந்நீராகும்
பெண் : இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
ஆண் : ரெட்டைக்கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்
பெண் : நேற்று ராத்திரி என் உடல் நனைந்திட
நான் விழித்தேன்…நான் விழித்தேன்
ஆண் : காதல் நாயகன் உன் கனவினில் வந்து
நான் கலந்தேன்…நான் கலந்தேன்
பெண் : இருட்டினில் வரலாமா
இருபுறம் தொடலாமா
ஆண் : இலக்கியம் இதுதானே
இலக்கணம் கெடலாமா
பெண் : விட்டுக் கொடுத்தால் கண்ணா
உன் வேகம் கட்டுப்படுமோ..
ஆண் : தொட்டுப்பிடித்தால் கண்ணே
உன் பார்வை சுட்டுவிடுமா
பெண் : அம்மாடி நான் பெண் பாவைதான்
உன் விரல்களும் தொட
தலை முதல் அடிவரை சுட
ஆண் : ரெட்டைக் கிளிகள் அன்றாடம்
பேசும் கட்டில் கதைகள்
பெண் : இறக்கை விரித்து ஒன்றாக
நீந்தும் எட்டுத் திசைகள்
ஆண் : தண்ணீர் மேகம் பன்னீர் தூவும்
பன்னீர் துளியும் வெந்நீராகும்
பெண் : இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
இருவர் : லல்ல லல்லலா..லல்லாலா லாலா லல்ல