பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பெண் : ராமனுக்கே சீதை என்று
வாழ்ந்ததுதான் பெண்மை
ராமனுக்கே சீதை என்று
வாழ்ந்ததுதான் பெண்மை
சீதை வழி நான் தொடர
ஆசை வைத்தேன் உண்மை
ஆசை வைத்தேன் உண்மை
பெண் : ராமனுக்கே சீதை என்று
வாழ்ந்ததுதான் பெண்மை
சீதை வழி நான் தொடர
ஆசை வைத்தேன் உண்மை
ஆசை வைத்தேன் உண்மை
பெண் : நிலவில்லாமல் எது வந்தாலும்
அல்லி மலருமா
நிலவில்லாமல் எது வந்தாலும்
அல்லி மலருமா
அது நிலவைத் தவிர வேறு யாரும்
சொல்லி மலருமா
அது நிலவைத் தவிர வேறு யாரும்
சொல்லி மலருமா சொல்லி மலருமா
பெண் : ராமனுக்கே சீதை என்று
வாழ்ந்ததுதான் பெண்மை
சீதை வழி நான் தொடர
ஆசை வைத்தேன் உண்மை
ஆசை வைத்தேன் உண்மை
பெண் : உறவு என்ற நூலெடுத்து
உயிர் மலரைத் தொடுத்தேன்
உறவு என்ற நூலெடுத்து
உயிர் மலரைத் தொடுத்தேன்
தொடுத்த மலரை இறைவன் கையில்
கொடுப்பதெற்கே துடித்தேன்
தொடுத்த மலரை இறைவன் கையில்
கொடுப்பதெற்கே துடித்தேன்
பெண் : இறைவன் இல்லா ஆலயத்தில்
ஏற்றி வைத்த தீபம்
இறைவன் இல்லா ஆலயத்தில்
ஏற்றி வைத்த தீபம்
இரவு பகல் எரிவதனால்
எவருக்கென்ன லாபம்
இரவு பகல் எரிவதனால்
எவருக்கென்ன……. லாபம்…..