பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
ஆண் : ஹ்ம்ம் ம்ஹ்ஹ்ஹ
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
பெண் : ம்ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : இரவு முடிந்துவிடும்
பெண் : முடிந்தால்
ஆண் : பொழுது விடிந்துவிடும்
பெண் : விடிந்தால்
ஆண் : ஊருக்கு தெரிந்துவிடும்
பெண் : தெரிந்தால்
ஆண் : உண்மைகள் புரிந்துவிடும்
ம்ம்ம்….ம்ம்ம்…..
இரவு முடிந்துவிடும்
பெண் : முடிந்தால்
ஆண் : பொழுது விடிந்துவிடும்
பெண் : காய் பழுத்துக்
கனிந்துவிட்டால்
கிளையில் தங்குமா
ஆண் : கைகளிலே விழுந்திடாமல்
பசியடங்குமா
பெண் : காய் பழுத்துக்
கனிந்துவிட்டால்
கிளையில் தங்குமா
ஆண் : கைகளிலே விழுந்திடாமல்
பசியடங்குமா
பெண் : பக்கத்திலே வந்து நின்றால்
வெட்கம் வராதா
பக்கத்திலே வந்து நின்றால்
வெட்கம் வராதா….
ஆண் : பருவ காலக் காற்றடித்தால்
குளிரெடுக்காதா
பெண் : இரவு முடிந்துவிடும்
ஆண் : முடிந்தால்
பெண் : பொழுது விடிந்துவிடும்
ஆண் : விடிந்தால்
பெண் : ஊருக்கு தெரிந்துவிடும்
ஆண் : தெரிந்தால்
பெண் : உண்மைகள் புரிந்துவிடும்
ம்ம்ம்….ம்ம்ம்…..
இரவு முடிந்துவிடும்
ஆண் : முடிந்தால்
பெண் : பொழுது விடிந்துவிடும்
ஆண் : ஆசையென்ற ஊஞ்சலிலே
ஆட வைத்தாயே
அருகில் நின்று உருகி உருகி
பாட வைத்தாயே
பெண் : அஞ்சி அஞ்சி வந்தவளை
அள்ளிக் கொண்டாயே
அஞ்சி அஞ்சி வந்தவளை
அள்ளிக் கொண்டாயே
நெஞ்சமெனும் பஞ்சணையில்
பள்ளி கொண்டாயே
இருவர் : இரவு முடிந்துவிடும் முடிந்தால்
பொழுது விடிந்துவிடும் விடிந்தால்
ஊருக்கு தெரிந்துவிடும் தெரிந்தால்
உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்….ம்ம்ம்…..
இருவர் : இரவு முடிந்துவிடும் முடிந்தால்
பொழுது விடிந்துவிடும் விடிந்தால்