Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Pani Thuli lyrics from Kanda Naal Mudhal movie - கண்ட நாள் முதல் திரைப்படத்திலிருந்து பனி துளி பனி துளி பனி துளி பாடல் வரிகள்

பனி துளி பனி துளி பனி துளி பாடல் 2005-ல் வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Krishna Kumar (KK)

Pani Thuli is a song from the 2005 Tamil film Kanda Naal Mudhal, written by Thamarai, composed by Yuvan Shankar Raja and sung by Krishna Kumar (KK).

WhatsApp
Year
2005
Lyrics
Thamarai

Lyrics(Tamil)

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு ...
வாடிவிடும் வாசமல்லி
சந்தனத்தை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது ...
எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..?
அரை டஜன் பெத்து கொடுங்க....!!

தக தக தக தக
தங்க சிலை தவிக்குது
வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!!
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு
தேவைப்படும் தாலாட்டுல
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க...

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பரித்து
வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு ...
வாடிவிடும் வாசமல்லி
சந்தனதை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது ...
எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..?
அரை டஜன் பெத்து கொடுங்க....!!

தக தக தக தக
தங்க சிலை தவிக்குது
வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!!
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு
தேவைப்படும் தாலாட்டுல
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க...

விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள்
எண்ணி அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்
ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்
ஓ... உன்னை நானும் என்னை நீயும் எங்கே என்று தேடினோம்..?
நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குளே பேசலானோம்
பேசும் போதே பேசும் போதே
மௌனம் ஆனோம்!!

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?

முகத்திரைகுள்ளே நின்று..
கண்ணாம் பூச்சி ஆடினாய்..
பொய்யால் ஒரு மாலை கட்டி ..
பூசை செய்து சூடினாய்

நிழல்களின் உள்ளே உள்ள
நிஜங்களை தேடினேன்
நீயாய் அதை சொல்வாய்
என்று நித்தம் உன்னால் வாடினேன்

சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாரும் இனி தேவை இல்லை...

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பரித்து
வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?

Pani Thuli song FAQ

Who sang Pani Thuli?

Pani Thuli was sung by Krishna Kumar (KK) for the 2005 Tamil film Kanda Naal Mudhal.

Who wrote the lyrics of Pani Thuli?

The lyrics of Pani Thuli were written by Thamarai.

Who composed the music for Pani Thuli?

The music for Pani Thuli was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Pani Thuli from?

Pani Thuli is from the Tamil film Kanda Naal Mudhal, released in 2005. The film has 7 songs on Tamilputhumai.

பனி துளி பனி துளி பனி துளி பாடலை பாடியவர் யார்?

பனி துளி பனி துளி பனி துளி பாடலை பாடியவர் Krishna Kumar (KK).

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கண்ட நாள் முதல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்