பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : பள்ளியிலே வெள்ளி நிலா
பள்ளியிலே வெள்ளி நிலா
பார்க்கும்போது
நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம்
வந்து வந்து போவதிங்கு
என்ன நாடகம்
பள்ளியிலே வெள்ளி நிலா
பள்ளியிலே வெள்ளி நிலா…
ஆண் : அந்த நாள் பார்த்தது ஆனந்த இரவு
இந்த நாள் பார்ப்பது ஆசையின் கனவு
என் தோள்களில் நீ இல்லையே
தாலாட்டிடும் தாய் இல்லையே
அன்னை பிள்ளை…. சொந்தம் போகுமா
ஆண் : பள்ளியிலே வெள்ளி நிலா
பள்ளியிலே வெள்ளி நிலா..ஆஆஆ…
ஆண் : வானுக்கும் பூமிக்கும்
பாதைகள் அமைத்தேன்
வாழ்க்கைக்கும் தேவைக்கும்
ஆசைகள் விதைத்தேன்
தீபாவளி இருளானதே
சூறாவளி உருவானதே
பாடும் ராகம் ….கேட்கவில்லையா
பெண் : பள்ளியிலே வெள்ளி நிலா
பள்ளியிலே வெள்ளி நிலா
பார்க்கும்போது
நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம்
வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம்
பள்ளியிலே வெள்ளி நிலா
பள்ளியிலே வெள்ளி நிலா…