Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Ore Oru Ooril lyrics from Saivam movie - சைவம் திரைப்படத்திலிருந்து ஒரே ஒரு ஊரில் பாடல் வரிகள்

ஒரே ஒரு ஊரில் பாடல் 2014-ல் வெளியான சைவம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: ஹரிசரண்

Ore Oru Ooril is a song from the 2014 Tamil film Saivam, written by Na. Muthukumar and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
சைவம்
Year
2014
Singers
Haricharan

Lyrics(Tamil)

ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
இந்த அன்பை போல வேறேது
வார்த்தைகள் எல்லாம் போதாது
எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும்
பறவை சொந்த கூட்டை மறந்திடுமா
எங்கு சென்று பூத்திடும் போதும்
மரங்கள் வேரை விட்டுக் கொடுத்திடுமா
வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத
இதிகாசம் இந்த பாசம் தான்
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
தானே நானே நானே தானே நானே நா
தானே நானே நானே தானே நானே நா

தேரோடும் வீதி அதில் மண் வாசம் வீசும்
தாழ்வாரம் எங்கும் தினம் தேவாரம் தான்
மூடாத வாசல் அது விருந்தோம்பல் பேசும்
எந்நாளும் இங்கே அட சந்தோசம் தான்
கண்ணீரை கண்கள் என்றும் பார்த்ததில்லை
ஏன் மண்மீது சொர்க்கம் இது தான்
அணில் ஆடும் முற்றத்தில் அன்பென்னும் ராகத்தில்
மயிலாக துள்ளி ஆடிப்பாடு
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு

பணம் காசு இல்லை பேரும் புகழ் கூட இல்லை
எது இந்த மண்ணில் அட இன்பம் தரும்
சொந்தங்கள் வந்து ஒரு சிரிப்பொன்று தந்தால்
அது போதும் என்றும் இந்த வாழ்வே வரம்
தந்தை சொல் வேதம் என்று போற்றும் பிள்ளைகள்
வருங்கால விழுதல்லவா
ஆகாயம் வீழ்ந்தாலும் பூலோகம் சாய்ந்தாலும்
அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும்
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
தானே நானே நானே தானே நானே நா
தானே நானே நானே தானே நானே நா

Ore Oru Ooril song FAQ

Who sang Ore Oru Ooril?

Ore Oru Ooril was sung by Haricharan for the 2014 Tamil film Saivam.

Who wrote the lyrics of Ore Oru Ooril?

The lyrics of Ore Oru Ooril were written by Na. Muthukumar.

Which movie is the song Ore Oru Ooril from?

Ore Oru Ooril is from the Tamil film Saivam, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.

ஒரே ஒரு ஊரில் பாடலை பாடியவர் யார்?

ஒரே ஒரு ஊரில் பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சைவம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்