Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Ooradangum Samathiley lyrics from Kalavani movie - களவாணி திரைப்படத்திலிருந்து ஊரடங்கும் சாமத்துல பாடல் வரிகள்

ஊரடங்கும் சாமத்துல பாடல் 2010-ல் வெளியான களவாணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: Senthilvelan

Ooradangum Samathiley is a song from the 2010 Tamil film Kalavani, written by Na. Muthukumar and sung by Senthilvelan.

WhatsApp
Movie Name (in Tamil)
களவாணி
Year
2010
Singers
Senthilvelan

Lyrics(Tamil)

ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்துல உன் நினப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சலசலக்கும் ஓலையெல்லாம் உஞ்சிரிப்பு
பொரண்டு படுத்தாலும் பாவிமகன் உன் நினப்பு
பாவி மகன் உன் நினப்பு.

(ஊரடங்கும் சாமத்துல….)

வெள்ளியில தீப்பெட்டியாம்
மச்சானுக்கு வெதவெதமா பீடிக்கட்டா
வாங்கித்தர ஆச வெச்சேன் - காச
சுள்ளி வித்து சேத்து வெச்சேன்
சம்புகனார் கோயிலுக்கு
சூடம் கொளுத்தி வெச்சேன் - போறவங்க வாரவங்க
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன் - நான்
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன்

ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்
ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்

(ஊரடங்கும்….)

கழனி சேத்துக்குள்ள கள எடுத்து நிக்கையிலே
உன் சொத்த பல்ல போல ஒரு சோழி ஒன்னு கண்டெடுத்தேன்.
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையிலே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே

கருவேல முள்ளெடுத்து கள்ளி செடியிலெலாம்
உம்பேரு எம்பேரு ஒருசேர எழுதினமே
ஊருணி கரையோரம் ஒக்காந்து பேசினமே
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…

ஊரு என்ன சொன்னாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவன்னு துண்டு போட்டு தாண்டினியே - அந்த
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…

Ooradangum Samathiley song FAQ

Who sang Ooradangum Samathiley?

Ooradangum Samathiley was sung by Senthilvelan for the 2010 Tamil film Kalavani.

Who wrote the lyrics of Ooradangum Samathiley?

The lyrics of Ooradangum Samathiley were written by Na. Muthukumar.

Which movie is the song Ooradangum Samathiley from?

Ooradangum Samathiley is from the Tamil film Kalavani, released in 2010. The film has 7 songs on Tamilputhumai.

ஊரடங்கும் சாமத்துல பாடலை பாடியவர் யார்?

ஊரடங்கும் சாமத்துல பாடலை பாடியவர் Senthilvelan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

களவாணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்