Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1993

Nilave Mugam lyrics from Ejamaan movie - எஜமான் திரைப்படத்திலிருந்து நிலவே முகம் பாடல் வரிகள்

நிலவே முகம் பாடல் 1993-ல் வெளியான எஜமான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். ஜானகி

Nilave Mugam is a song from the 1993 Tamil film Ejamaan, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by S. Janaki.

WhatsApp
Movie Name (in Tamil)
எஜமான்
Year
1993
Lyrics
Vaali
Singers
S. Janaki

Lyrics(Tamil)

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

பெண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

ஆண் : நிலவே முகம் காட்டு

***

பெண் : பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

ஆண் : காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

பெண் : நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

ஆண் : எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

பெண் : அணைத்தேன் உனையே இது தாய் மடியே

***

ஆண் : சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை மீறும் கண்ணின் நீரென்றால்
தினம் துடிப்பவன் நானே

பெண் : மாலையோடு நடக்கும் தேரய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரய்யா
உன்னை மீற யாரய்யா

ஆண் : மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

பெண் : இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு

ஆண் : இளம் பூங்கொடியே இது தாய் மடியே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

Nilave Mugam song FAQ

Who sang Nilave Mugam?

Nilave Mugam was sung by S. Janaki for the 1993 Tamil film Ejamaan.

Who wrote the lyrics of Nilave Mugam?

The lyrics of Nilave Mugam were written by Vaali.

Who composed the music for Nilave Mugam?

The music for Nilave Mugam was composed by Ilaiyaraaja.

Which movie is the song Nilave Mugam from?

Nilave Mugam is from the Tamil film Ejamaan, released in 1993. The film has 9 songs on Tamilputhumai.

நிலவே முகம் பாடலை பாடியவர் யார்?

நிலவே முகம் பாடலை பாடியவர் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

எஜமான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்