பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் சின்மயி
இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்
பெண் : நெஞ்சே….ஏ….ஏ….ஓஒ….ஹோ
நெஞ்சே….ஏ….ஏ….ஓஒ….ஹோ
கண்கள் ரெண்டும் காதல் சொல்ல
அன்பே நீயோ தள்ளிச் செல்ல
கண்ணைக் கட்டி காட்டில் விட்டால்
அன்பே நானும் எங்கே செல்ல
பெண் : ஒரு முறை என்னை நீ பார்த்திடு
விழிகளில் பேசிடும் மொழி கேட்டிடு
மனதினால் மெல்ல மழை தூவிடு
வலிக்கிறதே
சில முறை கண்கள் பொய் சொல்லுமே
சூழ்நிலை பொய்யை மெய்யாக்குமே
புகையென தோன்றும் பனி மூட்டமே
விலகுமே…..ஏ……
பெண் : நெஞ்சே….ஏ….ஏ….ஓஒ….ஹோ
பெண் : வேறென்ன அன்பே வேறென்ன
உன்னை நானும் கேட்பேன்
வாழ்ந்தாலும் மண்ணில் விழுந்தாலும்
உந்தன் அன்பை கேட்பேன்
இடைவெளிகள் குறைந்திடுமா
இனி இந்த தூரம் தாங்காதே
மனத் திரைகள் விலகிடுமா
எதற்க்கிந்த மௌனம் போதும்
பெண் : போகாதே போகாதே
என் நெஞ்சம் பாவம்
கண்ணீரில் தள்ளாடும்
என் காதல் ஓடம்
பெண் : நெஞ்சே….ஏ….ஏ….ஓஒ….ஹோ
கண்கள் ரெண்டும் காதல் சொல்ல
அன்பே நீயோ தள்ளிச் செல்ல
கண்ணைக் கட்டி காட்டில் விட்டால்
அன்பே நானும் எங்கே செல்ல
ஆண் : பார்க்கதே என்னை பார்க்கதே
பார்த்தால் கோபம் கூடும்
பேசாதே ஏதும் பேசாதே
உன்னால் துன்பம் போதும்
நடந்ததெல்லாம் மறந்திடலாம்
மனதினில் காயம் ஆறாதே
இதயத்திலே கீறி விட்டாய்
வலிக்குது பெண்ணே நாளும்
ஆண் : ஏன் உன்னை பார்த்தேனோ
என்னுள்ளே காயம்
உன் காதல் முள்ளாக
என் நெஞ்சில் பாயும்
ஆண் : நெஞ்சே….ஏ….ஏ….ஓஒ….ஹோ
பெண் : ஹா…..ஆ…..ஆஅ….ஆ….ஆ…ஆ…..
ஹா…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆ….ஆஅ…..