பாடகர்கள் : நிவாஸ் மற்றும் நித்யாஸ்ரீ மகாதேவன்
இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்
குழு : இமையில் இரண்டு நிலவு நுழைய
இரவும் பகலும் கனவு விரிய
குலுங்கும் வளையல் நடனம் புரிய
சிவந்த விரலில் மெஹந்தி வரைய
இதயம் முழுதும் ஏக்கம் தெரிய
பழக வேண்டும் தூக்கம் குறைய
கல்யாணப் பெண்ணே உன் கன்னம் எங்கும்
வெட்கம் வரைய
கண்ணன் வந்தான் உன்னை அறிய
வாழ்த்து சொன்னோம்
வா வா தோழி வா வா……
குழு : மெஹந்திய போட்டா
கை தானே செவக்கும்
இதயங்கள் சேர்ந்தா
கன்னங்கள் செவக்கும்
காதல போல அழகான மெஹந்தி
பூமியில் இங்கே எங்கும் இல்லை
ஓ பியாரி ஓ பியாரி ஓ பியாரி…
உன்னாலே போனானே உருமாறி…
குழு : மெஹந்திய போட்டா
கை தானே செவக்கும்
இதயங்கள் சேர்ந்தா
கன்னங்கள் செவக்கும்
காதல போல அழகான மெஹந்தி
பூமியில் இங்கே எங்கும் இல்லை
ஆண் : தீம்தன தீம்தன தீம்தன தீம்
தீம்தன தீம்தன தீம்
ஆண் : அந்த ஆகாய நீலத்துல
நான் பார்த்தேன் என் தேவதைய
அடி எங்கோ ஓர் ஆழத்துல
நான் கண்டேன் என் காதலிய
இந்த இடைவெளி மெல்ல கொறஞ்சிடனும்
உன் கை விரல் தொட்டுப் பேசிடனும்
உன் புன்னகை என் மேல் வீசிடனும்
வரும் காலங்கள் உன்னுடன் வாழ்ந்திடனும்
பெண் : ஏனோ ஏனோ
தேவை இன்றி நீயும் நானும்
ஆடிடும் நாடகமோ
குழு : மெஹந்திய போட்டா
கை தானே செவக்கும்
இதயங்கள் சேர்ந்தா
கன்னங்கள் செவக்கும்
காதல போல அழகான மெஹந்தி
பூமியில் இங்கே எங்கும் இல்லை
பெண் : பூவும் காற்றும் மௌனத்தில் பேசி
இணைந்தால் தானே பூ வாசமே
திருமணம் என்பது
இரு மனம் சேர்வது
இரண்டும் சேர்ந்தால் சந்தோஷமே
உள்ளூர ஆயிரம் ஊடல் வரும்
ஊடல்கள் தானே காதல் தரும்
மனம் விட்டு நீ பேசு மாற்றம் வரும்
குழு : ஹே கொட்டுங்க கொட்டுங்க மேளம்
ஹே தட்டுங்க தட்டுங்க தாளம்
மனம் இணையட்டும் ஒளி தெரியட்டும்
இனி வசந்தக் காலம் மலரட்டும்
குழு : மெஹந்திய போட்டா
கை தானே செவக்கும்
இதயங்கள் சேர்ந்தா
கன்னங்கள் செவக்கும்
காதல போல அழகான மெஹந்தி
பூமியில் இங்கே எங்கும் இல்லை
ஓ பியாரி ஓ பியாரி ஓ பியாரி…
உன்னாலே போனானே உருமாறி…