பாடகர் : ஆலப் ராஜா
இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்
ஆண் : ஹோ…ஹோ… ஹோ…ஹோ…ஹோ…
ஹோ…ஹோ…ஹோ…ஹோ…ஹோ…
ஆண் : என்ன பண்ணுவேன்
நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்
என் நெஞ்சைத்தான் என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்
ஆண் : தள்ளாடுதே தடுமாறுதே
உன் பின்னால் தத்தித் தாவுதே
வேண்டாமென்றே சொன்னாலுமே
கேட்காமல் உன்னைத் தேடுதே
ஆண் : பெண்ணே உன் கண்ணாலே
நெஞ்சில் காயம் தானடி
ஏதேதோ ஆகின்றேன்
இது மாயம் தானடி
எங்கெங்கோ போகின்றேன்
காதல் மேகம் தானடி
ஆனாலும் சொல்லாத
காதல் சோகம் தானடி
ஆண் : நான் என்ன பண்ணுவேன்
நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்
நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்
ஆண் : தள்ளாடுதே தடுமாறுதே
உன் பின்னால் தத்தித் தாவுதே
ஆண் : காதல் தேர்வு இது
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
இதில் தோற்றுப் போனால்
நான் என்ன பண்ணுவேன்
ஆண் : என்ன சொல்வாயோ
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
என்னை விட்டுச் சென்றால்
நான் என்ன பண்ணுவேன்
ஆண் : வரும் காற்றிலே உந்தன் வாசனை
என்றும் நெஞ்சிலே உந்தன் யோசனை
இந்தக் காதலே ஒரு வேதனை
இது வந்த பின் தரும் சோதனை
ஆண் : இந்த மாற்றம் யாவும் தந்ததாரு
மாயா மாயா
நெஞ்சை தீயின் மேலே விட்டதாரு
மாயா மாயா
அடிப் போடி என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்
ஐயய்யோ என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்
ஆண் : தள்ளாடுதே தடுமாறுதே
உன் பின்னால் தத்தித் தாவுதே
ஆண் : தித்திப்பானேனே
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
இதை ஒத்திப் போட்டாலே
நான் என்ன பண்ணுவேன்
ஆண் : தூரல் கண்டேனே
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
உடன் குடையை தந்தாயே
நான் என்ன பண்ணுவேன்
ஆண் : முன்பு கூட்டத்தில்
நீ ஒருத்தி தான்
இன்று எங்குமே நீ ஒருத்திதான்
இந்த நெஞ்சமே ஒரு பருத்திதான்
அதை கொளுத்தினால் எங்கும்
காதல் தீ தான்
ஆண் : எந்தன் வானவில்லை பூட்டச் சொன்னாய்
மாயா மாயா
என்னை மௌனமாக கத்தச் சொன்னாய்
மாயா மாயா
அடிப் போடி என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்
ஐயய்யோ என்ன பண்ணுவேன்
நான் என்ன பண்ணுவேன்