மை டியர் லேடி போதுங்க உன்
ஐடியா என்ன சொல்லுங்க
உனக்கும் எனக்கும் லிட்டிகேஷன்
உதவாது ஓல்ட் பேஷன் அல்ல ஹலோ (மை)
நீதியெல்லாம் எனக்காதாரம் என்
நினைவிலும் மோசம் வெகுதூரம்
நியாயத்தை நிலை நாட்ட பிறந்தேன்
நேர்மையுடன் நான் வாழ துணிந்தேன் (மை)
மனைவியை அடக்கும் பொறுப்பு
கணவனுக்குண்டென தீர்ப்பு
பொய்யென நினைத்தால் கெசட்டில் இருக்கு
மெய்யை சொன்னால் மோடி எதுக்கு (மை)
அல்லாடிக்கு முன்னே நான்
அஞ்சாமல் போய் நின்னேன்
எதிராளிக்கு முன்னே நான்
எதிர்வாதங்கள் சொன்னேன் இப்ப
பொண்டாட்டிக்கு பயந்து நடுங்கி
பதுங்குகிறேன் நான் பெண்ணைப் போலே (மை)
சமரச ஞானம் கண்டவனுக்கு
சம்சாரத்தில் ஏது பணி
சரச லீலையை மறந்த சீமான்
சட்டநாதனுக்கு ஏது பணி இனி
சட்டநாதனுக்கு ஏது பணி இனி
உனக்கும் எனக்கும் ஏது பணி
இனி ஏது பணி ஏது பணி.....பணி....