கொடுக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு
விலகத் தெரியாதா.....
காலமெல்லாம் பயணமே
கதையைப் போல தொடருமே
அகிலம் யாரும் சுற்றி வந்தால்
அமைதி காண முடியுமே...
கோயில் கண்டான் கூட்டம் கண்டான்
பக்தி கண்டான் பூஜை கண்டான்
ஆரவாரம் யாவும் கண்டான்
அமைதியைத்தான் காணவில்லை (காலம்)
ஆறு கண்டான் அமைதி இல்லை
அலையும் காற்றில் அமைதி இல்லை
மனதில் வாழும் அமைதி தன்னை
உலகமெங்கும் தேடுகின்றான்....(காலம்)
வீணை இங்கே...! நாதம் அங்கே....!
தீபம் இங்கே.....! ஜோதி அங்கே....!
ஆசை பாசம் யாவும் இங்கே.....!
அமைதி போன பாதை எங்கே....! (காலம்)