பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : முப்பது நிமிடம்
முப்பது நிமிடம்
காதல் கொள்ளவே போதுமா
முப்பது நிமிடம்
முப்பது நிமிடம்
காதல் கொள்ளவே போதுமா
பெண் : முப்பது நிமிடம்
முப்பது நிமிடம்
காதல் பார்வையே போதுமே
முப்பது நிமிடம்
முப்பது நிமிடம்
காதல் பார்வையே போதுமே
ஆண் : உடல் சாய்ந்து கொள்ள
உயிர் சேர்ந்துகொள்ள
ஒரு நொடியும் போதும் அல்லவா
பெண் : அட காதல் என்ன
அதில் காமம் என்னவென்று
முடியும்போது சொல்லவா
ஆண் : முப்பது நிமிடம்
முப்பது நிமிடம்
காதல் கொள்ளவே போதுமா
பெண் : முப்பது நிமிடம்
முப்பது நிமிடம்
காதல் பார்வையே போதுமே
ஆண் : இதழ் விட்டு மலர்ந்திட
கொடி அரும்புக்கு
ஒரு கணம் போதுமே
பெண் : இதயங்கள் கலந்திட
இரு விழிகளும்
இமைக்கும் பொழுது
அது போதுமே
ஆண் : வயசுக்கு பசி ஏறுது
வாலிபம் ருசியானது
பெண் : இடைவரை நண்டூருது
இறுதியில் நரியூருது
ஆண் : முத்தம்போடும் உச்ச நேரம்
ரத்தம் பாடும்
த த தரிகின தோம்
பெண் : {முப்பது நிமிடம்
முப்பது நிமிடம்
காதல் பார்வையே போதுமே} (2)
ஆண் : உடல் சாய்ந்து கொள்ள
உயிர் சேர்ந்துகொள்ள
ஒரு நொடியும் போதும் அல்லவா
பெண் : அட காதல் என்ன
அதில் காமம் என்னவென்று
முடியும்போது சொல்லவா
ஆண் : ஆஆ….ஆஅ…ஆஅ….
முப்பது நிமிடம்…ம்ம்ம்
பெண் : பதினைந்து நிமிடம்
படபடக்கின்ற பார்வையில்
கழிந்தது
ஆண் : இன்னும் ஐந்து நிமிடம்
எதை தொடுவது என்ற
தயக்கத்தில் கழிந்தது
பெண் : வாலிபம் சுதி ஏறுது
வர வர பயமாகுது
ஆண் : உன் உடல் அழகானது
நான் தொட மெழுகானது
பெண் : மிச்சம் உள்ள பத்து நிமிடம்
உச்ச நிமிடம்
த த தரிகின தோம்
ஆண் : முப்பது நிமிடம்
முப்பது நிமிடம்
காதல் கொள்ளவே போதுமா
பெண் : முப்பது நிமிடம்
முப்பது நிமிடம்
காதல் பார்வையே போதுமே
ஆண் : உடல் சாய்ந்து கொள்ள
உயிர் சேர்ந்துகொள்ள
ஒரு நொடியும் போதும் அல்லவா
பெண் : அட காதல் என்ன
அதில் காமம் என்னவென்று
முடியும்போது சொல்லவா