பாடகர்கள் : சாதனா சர்கம் மற்றும் கார்த்திக்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சே
பெண் : இதழ்கள் கடந்தே
இதயம் வழியே
இடையை தொடுதே
பெண் : காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சே
அத்தி பழ உடல் மட்டும்
உழைச்சிடுச்சே
அத்தை மகளுக்கு
பித்து பிடிச்சுடுச்சே
பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
உன்னை பிடிச்சிருக்கு ஒஹோ
ஆண் : காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சோ
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சோ
ஆண் : காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சோ
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சோ
பெண் : நீ ராஜாங்கம்
நான் போர் தொடுப்பேன்
ஆண் : ஓ ஹையையோ
நீ மெய் பொய்யோ
பெண் : அந்த வெத்தலையின் கொடியிலே
பச்சை கிளிகள்
நம்மை திக்கி திக்கி
பேசுதே ஏனடியோ
ஆண் : அந்த ஆலமர குடிசையில்
பூங்குயில்கள்
நம்ம பேரை சொல்லி
அழைப்பது ஏனடியோ
பெண் : இந்த கதையினை
யாரிடம் சொல்வதுவோ
பச்சை கூரை தோளை பத்தி
எரிகிறதே
பெண் : காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே ஓஹோ
ஆண் : கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சே
பெண் : காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே ஹே
ஆண் : அத்தை மகளுக்கு
பித்து பிடிச்சுடுச்சே
ஆண் : நீ மூன்றாம் பால்
நான் கை குழந்தை
பெண் : நீ தீபம் தான்
நான் திரியாவேன்
ஆண் : அந்த உலகத்து அழகிகள்
புத்தகம்
அந்த அட்டை படத்தினில்
உன் முகம்
பெண் : எந்தன் இருபது நகங்களை
பார்கிறேன்
அதில் தெரிவது
அழகிய உன் முகங்கள்
ஆண் : நாம் கடற்கரை
மணலில் நடக்கிறோம்
காதல் அலை காலை தொட்டு
நனைக்கிறதே
பெண் : காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சே
பெண் : காதல் வெட்டுக்கிளி
கண்ணை கடிச்சிருச்சே
கன்னம் குழியினில்
துள்ளி குதிச்சிருச்சே
பெண் : இதழ்கள் கடந்தே
இதயம் வழியே
இடையை தொடுதே
ஆண் : குழந்தையின் தேகம் பார்த்து
சிற்பியானேன்
காகித தேகம் பார்த்து
கவிஞன் ஆனேன்
தூங்கிய அழகை பார்த்து
ஓவியன் ஆனேன்
என்னை நீயும் தொட்டவுடன்
என்ன ஆனேன்
பெண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
உன்னை பிடிச்சிருக்கு ஒஹோ