Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Munbe Vaa lyrics from Sillunu Oru Kaadhal movie - சில்லென்று ஒரு காதல் திரைப்படத்திலிருந்து முன்பே வா என் அன்பே வா பாடல் வரிகள்

முன்பே வா என் அன்பே வா பாடல் 2006-ல் வெளியான சில்லென்று ஒரு காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: Naresh Iyer

Munbe Vaa is a song from the 2006 Tamil film Sillunu Oru Kaadhal, written by Vaali, composed by A.R.Rahman and sung by Naresh Iyer.

WhatsApp
Year
2006
Lyrics
Vaali
Singers
Naresh Iyer

Lyrics(Tamil)

(இசை)

பெண்:
முன்பே வா என் அன்பே வா
ஊடே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊடே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

(கோரஸ்)
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

பெண்:
ஆ… ஆ… ஆ…
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூ வைத்துப் பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய் ஓ... ஓ...

ஆண்:
நீ நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஹோ..

பெண்:
தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்…

முன்பே வா என் அன்பே வா
ஊடே வா உயிரே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே

ஆண்:
நான் நானா கேட்டேன் என்னை நானே

பெண்:
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

ஆண்:
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா? ஆ.. ஆ.. ஆ..

பெண்:
தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா?
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

ஆண்:
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே கலந்தவர் நாம்

பெண்:
முன்பே வா என் அன்பே வா
ஊடே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

ஆண்:
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா …

பெண்:
முன்பே வா என் அன்பே வா
ஊடே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

(கோரஸ்)
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

Munbe Vaa song FAQ

Who sang Munbe Vaa?

Munbe Vaa was sung by Naresh Iyer for the 2006 Tamil film Sillunu Oru Kaadhal.

Who wrote the lyrics of Munbe Vaa?

The lyrics of Munbe Vaa were written by Vaali.

Who composed the music for Munbe Vaa?

The music for Munbe Vaa was composed by A.R.Rahman.

Which movie is the song Munbe Vaa from?

Munbe Vaa is from the Tamil film Sillunu Oru Kaadhal, released in 2006. The film has 7 songs on Tamilputhumai.

முன்பே வா என் அன்பே வா பாடலை பாடியவர் யார்?

முன்பே வா என் அன்பே வா பாடலை பாடியவர் Naresh Iyer.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சில்லென்று ஒரு காதல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்