பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
பெண் : ஆனாலும் அவையாவும் நீயாகுமோ
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ
பெண் : ஆராரோ ஆராரோ ஆரிராரோ……….
ஆராரோ ஆராரோ ஆரிராரோ……….
பெண் : விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமோ
விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா
விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமோ
விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா
பெண் : கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ
கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ
இரு கைவீசி உலகாளும் மகனாகுமா
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ
பெண் : மணமாலை தனைச்சூடி உறவாடுவார்
மனம் மாறாமல் பல காலம் விளையாடுவார்
மணமாலை தனைச்சூடி உறவாடுவார்
மனம் மாறாமல் பல காலம் விளையாடுவார்
பெண் : ஒரு காலத் தமிழ்நாடு இதுதானடா
ஒரு காலத் தமிழ்நாடு இதுதானடா
இதை உன் காலத் தமிழ் நாடு அறியாதடா
பெண் : மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ
பெண் : ஆராரோ ஆராரோ ஆரிராரோ……….
ஆராரோ ஆராரோ ஆரிராரோ……….