மயக்கமா அந்தி மயக்கமா
அழகே அந்த மயக்கமா
மயக்கமே அந்தி மயக்கமே
அன்பே அந்த மயக்கமே....(மயக்கமா)
பொன் மாலை தேன் மயக்கத்தில்
மறைத்தேன் அன்பே விலைத்தேன்
ஆசையை வளர்த்தேன்
காதலை நாணத்தில் குழைத்தேன்
அதை சொல்லத் தான் தோழனை அழைத்தேன்
மென் கலை தேன் மயக்கத்தில்
இளைத்தேன் அழகே களித்தேன்
உயிரைத் தொலைத்தேன்
காதலை உள்ளத்தில் நிறைத்தேன்
அதை சொல்லத்தான் தோழியை அழைத்தேன் (மயக்கமா)
வெண்மாலை மெல்லத் தழுவிட
திகைத்தேன் அன்பே நெகிழ்ந்தேன்
மெல்லத்தான் குழைந்தேன்
என் மனதினில் நான் இன்றுதான் மகிழ்ந்தேன்
அதை சொல்லத்தான் தோழனை அழைத்தேன்
உன் வளை மெல்ல நழுவிட
வளைத்தேன் அழகே வளைந்தேன்
மெல்லத்தான் நிறைந்தேன்
என் வயதினில் நான் இன்றுதான் வாழ்ந்தேன்
அதை சொல்லத்தான் தோழியை அழைத்தேன்.(மயக்கமா)