என் மனமே என் மனமே என் மனமே
துள்ளிக் குதிக்கும் என் மனமே
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
மலரின் மணத்தையா
தென்றல் காற்றின் சுகத்தையா
கண்ணன் தோளில் ஆடத் துடித்திடும்
அந்தத் துளசியையா
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்....(துள்ளி)
எங்கோ கேட்கும் உன் கானம்
என்னைத் தானே வருத்தியது
தூங்கா நினைவில் தொடர்ந்து வந்தும்
எங்கோ என்னை துரத்தியது
என்னில் சுரக்கும் இசை எல்லாம்
உன்னால் தானே வந்ததம்மா
வெள்ளம் போல சூழ்ந்து வந்து
உன்னை என்னை நனைத்ததம்மா
இளமைக் கனவு இன்று வரை தொடர்ந்து வந்ததே
இத்தனை நாள் தெரிந்ததெல்லாம் மறந்து போனதே
ஒரு வார்த்தை இன்றியே நாம் பேசிக் கொள்ளலாம்
ஒரு பார்வை போதுமே நாம் வாழ்ந்து மலரலாம்
வீணை மீட்டும் விரல்கள் எல்லாம்
என்னைத் தானே மீட்டியது
தேனை எந்தன் நரம்புகளில்
ஊட்டாமல் ஏன் ஊட்டியது
கடலின் கரையில் மணல் வெளியில்
வானம் என்னை வாட்டியது
கனவாய் நனவாய் காலம் எல்லாம்
கலந்தே என்னை மீட்டியது
இளவயதின் நினைவு எல்லாம் மறப்பதில்லையே
வளர்ந்த பின்னே மறந்த வனம் மரமும் இல்லையே
ஒரு காலம் இன்றியே நம் பயணம் தொடரலாம்
இன்ப நாதவெளியிலே நாம் நடந்து போகலாம்..(துள்ளி)