ஆயக் கலைகளின் அறுபத்து நான்கினை
பிரம்மன் அவசரமாய் அள்ள அள்ள அள்ள
மெல்ல விழுந்தவள் இவளோ இவளோ இவளோ
அறுபது கலைகளின் அழகியும் இவளோ.....(ஆயக்)
நீலக் கண்கள் தான் கலைகளின் தாயகமோ
காதல் குரலில் கனிந்தது கனிரசமோ
சிலை மூக்கில் சிரித்தது சித்திரமோ
குழிக் கன்னத்தில் நாணத்தின் குங்குமமோ
செவ்விதழ்களில் மலர்களின் சாகா வரமோ
பெண் முகத்தில்தான் முழு நிலா தினம் வருமோ
நீளக் கழுத்திலே மணிமாலையின் சுயம்வரமோ
நளினக் கை விரல்களிலே ஈரைந்து விசித்திரமோ
நாட்டியத்தால் விரல்கள் பத்தும்தான் விளக்கிடுமோ
தொம் தொம் நாதிர்தானி தொம் தொம் திர்திர்தானி
துதி தகசுணு திர்திர்தானி தத்தோம்
தோம் தோம் திர்திர் தோம் தோம் தோம் திர்திர் தோம்
தோம் தோம் திர்திர் தோம் திர்திர்தானி தத்தோம்
பொன்னிலே மேனியோ இவள் கண்களே வாளிலிலோ
பெண்ணிலே ராணியோ இவள் மண்ணிலே மின்னலோ
ஆயக் கலைகளின் அறுபத்து நான்கினை
பிரம்மன் அவசரமாய் அள்ள அள்ள அள்ள
இள முதுகில்தான் சௌந்தர்யம் இருந்திடுமோ
பனி மார்பின் செழு மயக்கத்தில் வியந்திடுமோ
விரல் நகங்கள் பேதைக்கு ருசித்திடுமோ
மெல்ல கால் நகங்கள் நகைத்திட ரசித்திடுமோ
இடை பாவம் இளைத்திட ஊர்வலமோ
தளிர் வயிற்றில் ஒளிந்திடும் மென் நிலமோ
தேவப் பெண்மையின் சங்கதிதான் எவ்விடமோ
துளி ஒளிதான் தீண்டாத ரகசியமோ
கொஞ்சும் கால்களில் அசைகின்ற பொன் ரதமோ
வெண் கொலுசுப் பாதத்தில்
என்னை அழைக்கும் பரவசமோ
தொம் தொம் ஜில்ஜில்தானி
தொம் தொம் ஜில்ஜில்தானி
தொதித் தக்கச்சுணு ஜில்ஜில்தானி தத்தோம்
தோம் தோம் ஜில்ஜில் தோம்
தோம் தோம் ஜில்ஜில் தோம்
பார்வதி லக்ஷ்மி சரஸ்வதி வம்சமோ
யுவலோகமே மயங்கிடும் சிருங்காரமோ
இல்லை மிச்சம் இன்றி நிறைந்தது
வெறும் பருவம் செய்த மாயமோ
இதில் மச்சம் ஒன்றை மறைத்தது
மங்கை செய்த மாயமோ
ஆயக் கலைகளின் அறுபத்து நான்கினை
பிரம்மன் அவசரமாய் அள்ள அள்ள அள்ள