மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
மல்லியப் பூவ யாரு இப்போ வேலியில சூட்டுனா
கெளக்கே விடியயிலே மேற்கால தான் கருத்திருமா
ஆத்தாடி... பொத்தி வளத்தது போதுமா
என்ன ஒத்தையில் வித்தது நியாயமா
நீ ஓஞ்சு நின்னது ஏதம்மா
இப்ப சாஞ்சு கெடக்குற தாங்குமா
மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா
வேல வெட்டி இல்லாத வெட்டிப் பைய நானு
வாயக் கட்டி வளத்ததெல்லாம் ஆனதென்ன வீணு
ஆறாக நீ ஓட ஒதவாக்கர நானு
ஈரம் இல்லா நெஞ்சானாலும் ஊத்துதடி கண்ணு
வளத்த கடன் தீக்கலியே வார்த்த சொல்லிப் போகலியே
நீ எனக்குச் செஞ்சதெல்லாம் சொல்லி அழக் கூடலியே
ஆத்தா... நீ நெனச்சதென்ன சொல்லு நிம்மதி இல்ல
பொத்தி வளத்தது போதுமா
என்ன ஒத்தையில் வித்தது நியாயமா
நீ ஓஞ்சு நின்னது ஏதம்மா
இப்ப சாஞ்சு கெடக்குற தாங்குமா
மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா