கற்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது
இது ஞாயத்துக்கு ஒரு நாளுடா
தர்மம் பூட்டுப் போட்டா உள்ள அடங்காதுடா
இப்போ தடுக்குறவன் அட யாருடா
கூலிக்கொரு மாரடிக்கும் கூட்டத்துக்கு
கூலி தரும் நேரம் இது
பாவம் செஞ்சு பாவப்பட்ட கும்பலுக்கு
பலன் கெடைக்கும் நேரம் இது (கற்பகிரகம்)
தப்பு செஞ்சவன தாவியே புடிச்சு
தண்டிக்குமா தர்ம சாஸ்திரம்
சட்டமும் இங்கிருக்க ஞாயம் கெடைக்கல
சட்டத்தால் உண்டா பிரயோசனம்
சத்தியம் இன்னிக்குதான் சத்தியமா
சரியாக சட்டம் போட்டு பேசுது
தர்மங்கள ஏறிப் போகும் சாபக்கேடு ஓரத்துல
இப்ப விருமாண்டி வெளியேறும் போதே
அத குறுக்கே வந்து பறிக்கிறவன் யாரு..(கற்பகிரகம்)