பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
ஆண் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே
என் முத்து முத்து பசும்பொன்னே
ஆண் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே…..
ஆண் : காற்று வந்து மீட்டிவிடும்
ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம்
வானம் வரை ஏறி வரும்
ஆண் : காற்று வந்து மீட்டிவிடும்
ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம்
வானம் வரை ஏறி வரும்
ஆண் : ஒன்னா ரெண்டா சங்கீதம்
கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும்
எந்தன் மனம் வண்டாகும்
ஆண் : கண்மணி பெண்ணே
வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால்
என் துணை யாரடியோ
ஆண் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே…….
ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி
தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே
நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி
தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே
நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ஆண் : பாடும் குயில் பாட்டெல்லாம்
பாவை குரல் போலேது
நாளும் இசை கேட்டாலே
தாகம் பசி தோனாது
ஆண் : குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே
என் உள்ளம் சொர்க்கத்திலே
ஆண் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே
என் முத்து முத்து பசும்பொன்னே
ஆண் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே…..