பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : குயிலே குயிலே குயிலக்கா
பெண் 2 : குயிலே குயிலே குயிலக்கா
பெண் : கூட்டுக்குள்ளே யாரக்கா
பெண் 2 : கூட்டுக்குள்ளே யாரக்கா
பெண் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
பெண் : சொல்லடி சொல்லடி முன்னே
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே
என் முத்து முத்து பசும்பொன்னே
பெண் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே…..
பெண் : காற்று வந்து மீட்டிவிடும்
ஆற்றில் பல நூறு ஸ்வரம்
ஆண் : கேட்டு இளம் காதல் மனம்
வானம் வரை ஏறி வரும்
பெண் : காற்று வந்து மீட்டிவிடும்
ஆற்றில் பல நூறு ஸ்வரம்
ஆண் : கேட்டு இளம் காதல் மனம்
வானம் வரை ஏறி வரும்
பெண் : ஒன்னா ரெண்டா சங்கீதம்
கண்டால் சுகம் உண்டாகும்
ஆண் : உந்தன் இசை பூவாகும்
எந்தன் மனம் வண்டாகும்
பெண் : கண்மணி பெண்ணே
ஆண் : வந்திடு முன்னே
பெண் : கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால்
என் துணை யாரடியோ
பெண் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே…….
ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி
தோளில் தினம் போட்டு வைத்தேன்
பெண் : தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே
நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி
தோளில் தினம் போட்டு வைத்தேன்
பெண் : தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே
நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ஆண் : பாடும் குயில் பாட்டெல்லாம்
பாவை குரல் போலேது
பெண் : நாளும் இசை கேட்டாலே
தாகம் பசி தோனாது
ஆண் : குக்குக்கு குக்கூ
பெண் : மெட்டு கலந்து
ஆண் : சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே
என் உள்ளம் சொர்க்கத்திலே
பெண் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே
பெண் : என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
ஆண் : மெல்லிசை பாடடி கண்ணே
பெண் : என் முத்து முத்து பசும்பொன்னே
இருவர் : குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே…..