Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Konjam Konjam lyrics from Naan Ee movie - நான் ஈ திரைப்படத்திலிருந்து கொஞ்சம் உளறி பாடல் வரிகள்

கொஞ்சம் உளறி பாடல் 2012-ல் வெளியான நான் ஈ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Maragadha Mani · பாடியவர்: விஜய் பிரகாஷ்

Konjam Konjam is a song from the 2012 Tamil film Naan Ee, written by Madhan Karky, composed by Maragadha Mani and sung by Vijay Prakash.

WhatsApp
Movie Name (in Tamil)
நான் ஈ
Year
2012

Lyrics(Tamil)

கொஞ்சம் உளறிக் கொட்டவா?
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா?
கொஞ்சம் வாயை மூடவா?
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?

கொஞ்சம் வழியை கேட்டேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்

நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்.

கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு

கொஞ்சம் திறக்கச் சொன்னேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் மறைக்கப் பார்க்கிறாய்

ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை
இன்றாவது உடை

காக்கை தூது அனுப்பிடு
காற்றாய் வந்துன் கூந்தல் கோதுவேன்
ரெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்

இன்னும் ஜென்மம் கொண்டால் - உன்
கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்

என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா!
ஈருயிரை சேர்க்க வா!
ஒன்றாகிட வா!

Konjam Konjam song FAQ

Who sang Konjam Konjam?

Konjam Konjam was sung by Vijay Prakash for the 2012 Tamil film Naan Ee.

Who wrote the lyrics of Konjam Konjam?

The lyrics of Konjam Konjam were written by Madhan Karky.

Who composed the music for Konjam Konjam?

The music for Konjam Konjam was composed by Maragadha Mani.

Which movie is the song Konjam Konjam from?

Konjam Konjam is from the Tamil film Naan Ee, released in 2012. The film has 6 songs on Tamilputhumai.

கொஞ்சம் உளறி பாடலை பாடியவர் யார்?

கொஞ்சம் உளறி பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நான் ஈ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்