Tamil Songs lyrics · 2021
En Iniya Thanimaye lyrics from Teddy movie - ரெடி திரைப்படத்திலிருந்து என் இனிய தனிமையே பாடல் வரிகள்
என் இனிய தனிமையே பாடல் 2021-ல் வெளியான ரெடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: சித் ஸ்ரீராம்
En Iniya Thanimaye is a song from the 2021 Tamil film Teddy, written by Madhan Karky, composed by D. Imman and sung by Sid Sriram.
- Movie Name
- Teddy 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரெடி
- Music
- D. Imman
- Year
- 2021
- Lyrics
- Madhan Karky
- Singers
- Sid Sriram
Lyrics(Tamil)
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ……ஏ…..ஏ…..
என் இனிய தனிமையே
புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான் நடந்தால்
எல்லாம் பேரழகு
மழை வீழும் இள மாலையோ
இசையில்லா இடைவேளையோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு
உன்னோடு மட்டும்தான்
என் நேரம் எனது
உன்னோடு மட்டும்தான்
மெய் பேசும் மனது
மனிதரின் மொழி
கேட்டு…….கேட்டு….
இதயம் பழுதாய்
உணதமைதியில் தானே
ஆனேன் முழுமுழுதாய்
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே
அலை மோதும் கரை மீதிலோ
மணல் பாதம் சுடும் போதிலோ
உன்னோடு நான் நடந்தால்
மண்ணே பூச்சிறகு
கரைகின்ற அடி வானமோ
குறையாத பெருந்தூரமோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு
என் தாயின் கருவில்
என்னோடு பிறந்தாய்
என் வாழ்வின் முடிவில்
என்னோடு இருப்பாய்
உறவுகள் வந்து
சேரும் நீங்கும்
நீதான் நிலையாய்
அதற்க்கு உணர்க்கொரு
நன்றி சொன்னேன்
முதல் முறையாய்
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே
இதுவரை கற்கா
கலைகள் எல்லாம்
உன்னுடன் கற்கும் வேளையிலே
என்னுயிர் தோழி
நீயென்பேன் நீயென்பேன்….
இதுவரை காணா
காட்சிகளை
உன்னுடன் காணும் வேளையிலே
எந்தன் காதல்
நீயென்பேன் நீயென்பேன்….
ஒரு சிலர் என்னை நெருங்க
என்னிடம் பேச தொடங்க
சிறு ஊடல் கொண்டு
நீங்கி போகின்றாய்
கவலைகள் என்னை வருத்த
உன்னிடம் என்னை துரத்த
உன் மடியை தந்து
தாயாய் ஆகின்றாய்
எனை துயிலென அணைத்திடு
தனிமையே
என் கனவிலும் தொடர்ந்திடு
தனிமையே
கண் விழிக்கையில் இருந்திடு
தனிமையே
தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே…..ஏ…..
என் இனிய தனிமையே…..ஓஹ்ஹோ
என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ…..
என் இனிய தனிமையே……
En Iniya Thanimaye song FAQ
Who sang En Iniya Thanimaye?
En Iniya Thanimaye was sung by Sid Sriram for the 2021 Tamil film Teddy.
Who wrote the lyrics of En Iniya Thanimaye?
The lyrics of En Iniya Thanimaye were written by Madhan Karky.
Who composed the music for En Iniya Thanimaye?
The music for En Iniya Thanimaye was composed by D. Imman.
Which movie is the song En Iniya Thanimaye from?
En Iniya Thanimaye is from the Tamil film Teddy, released in 2021. The film has 4 songs on Tamilputhumai.
என் இனிய தனிமையே பாடலை பாடியவர் யார்?
என் இனிய தனிமையே பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.