என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி
என் உடல் இன்று கடல் ஆனதே
என் உயிருக்குள் அலையாடுதே
இந்த பறைக்குள் பனி பாய்ந்ததே
என் விரகத்தில் விளையாடுதே
ஒ .. சகி ... வா .. சகி ...
பிரிய சகி ... பிரிய சகி ...
விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்று அறிந்தேனடி
புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தாயடி
மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
உன் படை கொண்டு என்னை சுற்றி வளைத்தாயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய் .....
அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று ..?
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே ...
(ஒ சகி )