Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Desiyageetham lyrics from Desiya Geetham movie - தேசிய கீதம் திரைப்படத்திலிருந்து தேசியகீதம் பாடல் வரிகள்

தேசியகீதம் பாடல் 1998-ல் வெளியான தேசிய கீதம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்

Desiyageetham is a song from the 1998 Tamil film Desiya Geetham, composed by Ilaiyaraaja and sung by K. J. Yesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
தேசிய கீதம்
Year
1998

Lyrics(Tamil)

ஓம் பாரத மாதா ஜனனி வந்தே மாதரம்
ஓம் பாரத மாதா ஜனனி வந்தே மாதரம்

ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா
காந்தியின் கைத்தடி ஆயுத சந்தையில் போட்டது யார்
அழுகுரல் ஓசையை மேடையின் குரல்களில் மறைத்தது யார்
சுதந்திரமே சோதனையா வேதனையா
ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா

கண்ணீரும் பலர் செந்நீரும் விடுதலை வாங்கிய தேசம்
வம்பாலும் வெடிகுன்டாலும் ஆனது ஆனது நாசம்
சாதிகளால் மோதல்களால் நூறாய் சிதறுவதோ
கவலைகளின் கருவறையில் இனியும் உறங்குவதோ
மதமெனும் பேய்களின் நீதி
உயிர் துடிக்குது உங்களின் நீதி
சத்தியம் பிழைத்திட சத்திய சோதனை நடக்குதோ
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா
காந்தியின் கைத்தடி ஆயுத சந்தையில் போட்டது யார்
அழுகுரல் ஓசையை மேடையின் குரல்களில் மறைத்தது யார்
சுதந்திரமே சோதனையா வேதனையா
ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா

தேர்தலினால் பல கட்சிகளால் தேவைகள் தீர்ந்திடவில்லை
தோல்விகளால் அதன் வேதனையால் தலைவர்கள் திருந்திடவில்லை
வென்றவனோ ஊழலெனும் ஊஞ்சலில் ஆடுகிறான்
வாக்குகளை போட்டவனோ வறுமையில் வாடுகிறான்
என்றைக்கு இந்நிலை மாறும்
இலையுதிர் காலங்கள் ஓடும்
பசி கொண்ட பூமியில் பசுமையின் புரட்சிகள் நடக்குதோ
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா
காந்தியின் கைத்தடி ஆயுத சந்தையில் போட்டது யார்
அழுகுரல் ஓசையை மேடையின் குரல்களில் மறைத்தது யார்
சுதந்திரமே சோதனையா வேதனையா
ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா

Desiyageetham song FAQ

Who sang Desiyageetham?

Desiyageetham was sung by K. J. Yesudas for the 1998 Tamil film Desiya Geetham.

Who composed the music for Desiyageetham?

The music for Desiyageetham was composed by Ilaiyaraaja.

Which movie is the song Desiyageetham from?

Desiyageetham is from the Tamil film Desiya Geetham, released in 1998. The film has 8 songs on Tamilputhumai.

தேசியகீதம் பாடலை பாடியவர் யார்?

தேசியகீதம் பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேசிய கீதம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்