பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : பந்தம் பந்தம் பந்தம்
ஆண் : பந்தம் பாச பந்தம்
பந்தம் பாச பந்தம்
பிறக்கும் போதே
கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்
பிறக்கும் போதே
கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்
பந்தம் பாச பந்தம்
பந்தம் பாச பந்தம்
ஆண் : கருவறை தொடங்கி காலங்கள் தோறும்
கடவுள் மாட்டிய கை விலங்கு
கருவறை தொடங்கி காலங்கள் தோறும்
கடவுள் மாட்டிய கை விலங்கு
இது ஒருவரையொருவர் பிரிந்து விடாமல்
உறவுகள் பூட்டிய கால் விலங்கு
உறவுகள் பூட்டிய கால் விலங்கு
ஆண் : பந்தம் பாச பந்தம்
பந்தம் பாச பந்தம்
பிறக்கும் போதே
கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்
பிறக்கும் போதே
கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்
பந்தம் பாச பந்தம்
பந்தம் பாச பந்தம்
ஆண் : தகப்பன் மகளின் பந்தம் எல்லாம்
பிறந்தவர் வீட்டில் வாழும் வரை
தகப்பன் மகளின் பந்தம் எல்லாம்
பிறந்தவர் வீட்டில் வாழும் வரை
அவள் நல்லவன் ஒருவன் நாயகியானால்
இல்லற பந்தம் இறுதிவரை
இல்லற பந்தம் இறுதிவரை
ஆண் : பந்தம் பாச பந்தம்
பந்தம் பாச பந்தம்
பிறக்கும் போதே
கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்
பிறக்கும் போதே
கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்
பந்தம் பாச பந்தம்
பந்தம் பாச பந்தம்