அத்தையின் மகளே என்னடி ரகளை
பூட்டிக்க தங்கமாலை தருவேன் நானே
மாப்பிள்ளை மனசு பேச்சுதான் பெரிசு
மணமாகுமுன்னே இதை நீ ஏன் தருவாய்
நான் உன்னை அறிவேன் நடிக்காதே கண்ணு
நல்ல நாள் நாளைக்கம்மா என் கூடவா
கல்யாணமாகும் வரைக்கும் அவசரம் என்னய்யா
கலங்காதே சும்மா இரு நானாடுவேன்
கண்ணே சிங்காரி நான் பிரம்மச்சாரி
தாலியைக் கட்டு ஐயா தயக்கம் எதுக்கு
என் தம்பிக்கு அண்ணியா ஆகணும் நீயும்
உனக்கம்மா மாப்பிள்ளே நானாகவே
என்னோடு ஆடவா......கண்ணோடு சேரவா
கல்யாணப் பந்தலிலே ஜோராகவே
நீ ரொம்ப நடிக்கிறே.....ஏன் என்னை நெருங்கிறே
மயங்குது மனசு ஏனோ அறியேன்....(அத்தை)