நல்ல தலைவன் பாதையிலே
சென்று வருவீர் தோழர்களே
நாளை நினைவு நமக்கென்ன
நம்மைப் படைத்தவன் சுமக்கின்றான் (நல்ல)
உண்மைக்கிங்கே இடமில்லை
நல்லவனாகத் துணிவில்லை
உண்மை இதயம் துடிக்கின்றது
உழைத்த மனிதன் அழுவதனால்
ஓடிவிடுவார்கள் வாழத்தெரியாது
மனிதன் எங்கே நீதி எங்கே
நல்லவென்று யார் இங்கே
நல்ல தலைவன் பாதையிலே
பணத்துக்கு மனிதன் தாசனடா
பார்வையில் இருக்கு வெறும் நடிப்பு
ஆளைக் கண்டு மயங்காதே
நெருங்கிப் பார்த்தால் வரும் வெறுப்பு
ஆசை நெஞ்சில் வளர்க்கின்றான்
நேசம் மறந்து வாழ்கின்றான்
கொள்ளைக்காரனடா இவனே நடிகனடா
பார்க்கும் பார்வை தாக்கும் நம்மை
உள்ளதைச் சொன்னேன் எனக்கென்ன..(நல்ல)