ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் (ஆரம்ப)
சின்ன சின்ன மச்சம் ஒன்று உன்
உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன்
கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை
இன்னும் என்று இதழைக் கேட்பதேன்
கேட்டால் தருவேன் கேளடி கண்ணே
கேளாமல் தந்தால் என்ன (ஆரம்ப)
தொட்டில் இட்ட மொட்டு இரண்டு
துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன்
காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும்
மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன்
மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்
அதுதானே பெண் என்பது (ஆரம்ப)