Tamil Songs lyrics · 1983
Aanantham Vilaiyadum lyrics from Sandhippu movie - சந்திப்பு திரைப்பட பாடல் வரிகள்
Aanantham Vilaiyadum பாடல் 1983-ல் வெளியான சந்திப்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: M. S. Vishwanathan · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan
Aanantham Vilaiyadum is a song from the 1983 Tamil film Sandhippu, written by Vaali, composed by M. S. Vishwanathan and sung by P. Susheela and T. M. Soundarajan.
- Movie Name
- Sandhippu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சந்திப்பு
- Music
- M. S. Vishwanathan
- Year
- 1983
- Lyrics
- Vaali
- Singers
- P. Susheela and T. M. Soundarajan
Lyrics(Tamil)
பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
பெண் : ஒரு நூல் கொண்டு உருவான மாலை
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
இன்பம் நாள் தோறும்
பூ பூக்கும் சோலை
இது ஆனந்தம் விளையாடும் வீடு.........
பெண் : நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு
அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு
பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு
ஆண் : மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
எடுத்தாலும் என்ன எழேழு பிறவி
நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி
ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு
ஆண் : இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
பெண் : நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
இருவர் : ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு
Lyrics(English)
Female : Aanandam vilaiyaadum veedu ithu
Aanandam vilaiyaadum veedu
Naangu andrilgal ondraana koodu
Naangu andrilgal ondraana koodu ithu
Aanandam vilaiyaadum veedu
Female : Oru nool kondu uruvaana maalai
Oru nool kondu uruvaana maalai
Inbam naal thorum
Poo pookkum solai ithu
Aanandam vilaiyaadum veedu
Female : Naan konda kanavan nadamaadum deivam
Neengamal engal nalam kaanum selvam
Naan konda kanavan nadamaadum deivam
Neengamal engal nalam kaanum selvam
Avan thantha uravil aasaigal thirandu
Azhagaaga eendren pillaigal irandu
Female : Aanandam vilaiyaadum veedu ithu
Aanandam vilaiyaadum veedu
Male : Maangalyam thavazhum magarasi vathanam
Malarnthaalae pothum verethu ulagam
Maangalyam thavazhum magarasi vathanam
Malarnthaalae pothum verethu ulagam
Eduthaalum enna ezhezhu piravi
Nee thaanae kannae enakketra manaivi
Male : Aanandam vilaiyaadum veedu
Naangu andrilgal ondraana koodu
Ithu aanandam vilaiyaadum veedu
Male : Imai pola irandu vizhikaakkum thaaye
Ethu vantha pothum sumai thaangi neeye
Ethu vantha pothum sumai thaangi neeye
Female : Neethaane engal thirukoyil vilakku
Nee illai endraal theriyaathu kizhakku
Both : Aanandam vilaiyaadum veedu
Naangu andrilgal ondraana koodu
Ithu aanandam vilaiyaadum veedu
Aanantham Vilaiyadum song FAQ
Who sang Aanantham Vilaiyadum?
Aanantham Vilaiyadum was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1983 Tamil film Sandhippu.
Who wrote the lyrics of Aanantham Vilaiyadum?
The lyrics of Aanantham Vilaiyadum were written by Vaali.
Who composed the music for Aanantham Vilaiyadum?
The music for Aanantham Vilaiyadum was composed by M. S. Vishwanathan.
Which movie is the song Aanantham Vilaiyadum from?
Aanantham Vilaiyadum is from the Tamil film Sandhippu, released in 1983. The film has 6 songs on Tamilputhumai.
Aanantham Vilaiyadum பாடலை பாடியவர் யார்?
Aanantham Vilaiyadum பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.