பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : ஆகாய தொட்டில் கட்டி
அன்பே நீ ஊஞ்சல் ஆடு
மேகத்தில் மெத்தையிட்டு
கண்ணே நீ கண்ணுறங்கு
தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட
எந்தன் உயிரே நீ உறவாட வா……
ஆண் : ஆகாய தொட்டில் கட்டி
அன்பே நீ ஊஞ்சல் ஆடு
குழு : …………………………..
ஆண் : கண்ணுக்குள் வேலியிட்டு
என் கண்ணாக நான் வளர்ப்பேன்
வானத்து வெண்ணிலவா
உன் நெத்திக்கு பொட்டு வைப்பேன்
ஆண் : வெண்பனி காலை சந்தங்கள் பாட
சந்தனக் காற்றும் சாமரம் வீச
ஆராரோ நான் பாட நீ கேட்டு கண் மூட
ஆண் : ஆகாய தொட்டில் கட்டி
அன்பே நீ ஊஞ்சல் ஆடு
மேகத்தில் மெத்தையிட்டு
கண்ணே நீ கண்ணுறங்கு
குழு : ……………………………
ஆண் : உயிருக்கு உயிரான
என் உசிர நான் அடகு வச்சேன்
மீட்கத்தான் முடியாம
தினந்தோறும் நான் தவிச்சேன்
ஆண் : பிரம்மனின் கைகள் எழுதிய தீர்ப்பில்
தாய் சேய் உறவே பிரிந்திடும் விதிகள்
புது சொந்தம் எது வந்தாலும்
பந்தம் அது போலேது
ஆண் : ஆகாய தொட்டில் கட்டி
அன்பே நீ ஊஞ்சல் ஆடு
மேகத்தில் மெத்தையிட்டு
கண்ணே நீ கண்ணுறங்கு
தென்றல் வந்து தாலாட்ட கங்கை வந்து நீராட்ட
எந்தன் உயிரே நீ உறவாட வா……
ஆண் : ஆகாய தொட்டில் கட்டி
அன்பே நீ ஊஞ்சல் ஆடு