ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா
நின்னு வாழ்ந்து காட்ட வேணும்
இந்த புவியில் ரொம்ப பெருசா
ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா
சூரியன கேளு வாங்கி நான் தருவேன்
சந்திரன கேளு கொண்டு நான் வருவேன்
வங்க கடலை நீ சின்ன குவாலையில்
கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன்
சிங்கம் சிறுத்தையை ஒத்த நொடியில
கொன்னு வர சொல்லு செஞ்சிடுவேன்
உலகே அழிஞ்சாலும் உன்ன நான் காத்திடுவேன்
என்னோட பெருமை என்ன உன் உருவில்
பாத்திடுவேன்
ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா
எப்பவுமே நீதான் என்னோட ஆவி
பட்டம் பல வாங்கி ஆகனுமே தாமி
உன்னை விட இங்கு சொத்து சுகம்
இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன்
கண்ணின் மணியென உன்ன நினைச்சு நான்
கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன்
எதையும் எடுத்துதான் கொஞ்சிடுவேன்
எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன்
ஒத்த நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன்
ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா