வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பூஜை பாத்திரங்களை பலபலவென்று சுத்தம் செய்யலாம்.

 0  26
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பூஜை பாத்திரங்களை பலபலவென்று சுத்தம் செய்யலாம்.

பெண்கள் வீட்டில் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள சமையல் செய்வது, பூஜை செய்வது இவை இரண்டு தான். இதில் பூஜை செய்வதற்கு பயன்படுத்தும் பூஜை பாத்திரங்களை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் பெண்கள் அதிக கவனமாக இருப்பார்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பூஜைக்கு முன்னதாகவே பூஜை பொருட்களை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இவ்வாறு சுத்தம் செய்து வைக்கும் பூஜை பாத்திரங்கள் ஓரிரு நாட்களில் கருத்து விடுகின்றன. அல்லது கருப்பு அடைந்து மங்கலான தோற்றத்தில் காட்சி அளிக்கின்றன. இவற்றை எளிதாக அகற்றி பூஜை பொருட்களை புதியது போல் பளபளவென்று மாற்ற வீட்டில் பயன்படுத்தும் இந்த மூன்று பொருட்களை வைத்தே சுலபமாக செய்ய முடியும். வாருங்கள் இவ்வாறு பூஜை பாத்திரங்களை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பூஜை சம்பந்தமான விஷயங்களை செய்யும் பொழுது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். வீட்டை சுத்தம் செய்வது, பூஜை அறையை சுத்தம் செய்வது, பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையில் செய்வது என்பதை தவிர்த்து விட வேண்டும். அவ்வாறு இந்த தினங்களில் நாம் செய்யும் இவ்வாறான விஷயங்கள் நமது வீட்டின் அதிர்ஷ்டத்தை வெளியேற செய்து விடும். எனவே இது போன்ற தினங்களில் பூஜை செய்ய வேண்டிய வேலை இருந்தால் அதற்கு ஒரு தினம் முன்னதாகவே சுத்தம் செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும்.

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன்னர் அவற்றில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை ஒரு துணி வைத்து துடைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஒரு அகன்ற பாத்திரத்தில் வைத்து, அந்த பாத்திரங்கள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப்பழ அளவு புளியை அதில் கரைத்துவிட வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து இந்த பாத்திரத்தை மேலே வைத்து சூடுபடுத்த வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் தனியாக பிரிந்து வரும்.

அதற்குப் பின்னர் அடுப்பை அனைத்து பாத்திரங்களை சுடு தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க வேண்டும். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு ஹேண்ட்வாஷ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 ஸ்பூன் பல் துலக்கும் பேஸ்ட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து அதன் சாறை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு ஸ்க்ரப்பர் அல்லது ஒரு புதிய பல் துலக்கும் பிரஷ்ஷை எடுத்துக்கொண்டு இந்த கலவையை தொட்டு தொட்டு பூஜை பாத்திரங்கள் அனைத்தையும் நன்றாக தேய்த்துவிட வேண்டும். பிரஷ்ஷை பயன்படுத்தி இவ்வாறு தேய்ப்பதன் மூலம் சிறுசிறு இடுக்குகளிலும் இருக்கும் கருப்பு நிற அழுக்குகளை சுத்தமாக அகற்ற முடியும். இவ்வாறு அனைத்து பூஜை பாத்திரங்களை தேய்த்து முடித்து சுத்தமான தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும்.

பிறகு தண்ணீரை சுத்தமாக துடைத்து விட்டு வீட்டில் சாதாரணமாக முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை ஒரு துணியில் லேசாக தொட்டு பூஜை பாத்திரங்கள் முழுவதையும் துடைத்து விட்டால் பூஜை பாத்திரங்கள் மேலும் பளபளப்புடன் மின்ன ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் அதிக நாட்களுக்கு பூஜை பாத்திரங்கள் கருக்காமல் இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow